பதிவு செய்த நாள்
08 அக்2017
04:27
‘பஜாஜ்’ நிறுவனம், பிரீமியம் பைக்கான, ‘பல்சர்’ இருப்பை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், ‘என்.எஸ்., 200’ பைக்கை, தற்போது, சில மாற்றங்களுடன், சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது, ‘பிரேக்’ பிடித்தால், பைக்கை, இடறி விடாத, ஏ.பி.எஸ்., எனப்படும், ‘ஆன்டி – லாக் பிரேக்கிங்’ வசதியுடன் வந்துள்ளது. மற்றபடி, முந்தைய மாடலில் இருந்த, அதே, 23.5 எச்.பி., சக்தி உடைய, 199.5 சிசி இன்ஜின் தான் பொருத்தப்பட்டு உள்ளது.ஏ.பி.எஸ்., வசதி இல்லாத, ‘பல்சர், என்.எஸ்., 200’ விலையை விட, 12,600 ரூபாய் வரை, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. டில்லியில், இதன் ஷோரூம் துவக்க விலை, 1.08 லட்சம் ரூபாய். இது, ‘அப்பாச்சி, ஆர்.டி.ஆர்., 200, 5வி; ‘யமஹா, எப்.இசட்., 25’ ஆகியவற்றுக்கு, கடும் போட்டியை கொடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|