பதிவு செய்த நாள்
09 அக்2017
23:48

புதுடில்லி : ‘கடந்த, 2016 – 17ன், காபி சந்தைப்படுத்தும் பருவத்தில், நாட்டின் காபி ஏற்றுமதி, 3.77 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது’ என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, காபி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாட்டின் காபி ஏற்றுமதி, 2016 – 17ன், அக்., – செப்., வரையிலான, சந்தைப்படுத்தும் பருவத்தில், 9.36 சதவீதம் ஏற்றம் கண்டு, 3.77 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, 2015 – 16ல், 3.45 லட்சம் டன்னாக இருந்தது. உள்நாட்டில், தேவையை விஞ்சிய உற்பத்தி; சர்வதேச சந்தையில் நிலையான மதிப்பு போன்றவற்றால், 2015 – 16ல், ஏற்றுமதி அதிகரித்தது.
இதன் விளைவாக, கடந்த சந்தைப்படுத்தும் பருவத்திலும், ஏற்றுமதி உயர்ந்துள்ளது. மதிப்பீட்டு பருவத்தில், காபி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 6,191.43 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பொதுவாக, காபி ஏற்றுமதியில், 70 சதவீதம், ரோபஸ்டா வகை; 30 சதவீதம், அரபிகா வகையின் பங்கு இருக்கும். இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு, காபி, அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|