பதிவு செய்த நாள்
17 அக்2017
05:16
புதுடில்லி : ‘இந்திய தொலை தொடர்பு சேவை துறையில், அடுத்த, 12 -– 18 மாதங்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும்’ என, சர்வதேச தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில், மொபைல் போன் நிறுவனங்கள், ஒன்றுடன் ஒன்று இணைந்து வருகின்றன. இதனால், முன்னணி நிறுவனங்கள் இடையிலான போட்டி அதிகரித்துள்ளது. பார்தி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் வோடபோன் இந்தியா ஆகிய நிறுவனங்கள், அவற்றின் வர்த்தகத்தை பாதுகாத்துக் கொள்வதுடன், சந்தை பங்கை அதிகரிக்கவும், கடுமையாக போராடும்.பார்தி ஏர்டெல் நிறுவனம், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. ரொக்கமில்லாமல், அகண்ட அலைவரிசை உரிமத் தொகையில், சிறிய பங்களிப்பை மட்டுமே வழங்கியதன் மூலம், பார்தி ஏர்டெல், நான்கு கோடி சந்தாதாரர்களை கூடுதலாக பெற்றுள்ளது.வோடபோன் நிறுவனம், ஐடியா செல்லுலார் நிறுவனத்தை கையகப்படுத்தி, சந்தை பங்களிப்பை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆர்ஜியோவும் கவர்ச்சியான சலுகைகள் மூலம், வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|