பதிவு செய்த நாள்
25 அக்2017
06:28

புதுடில்லி, அக். 25–‘‘சுற்றுலா துறையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,’’ என, மத்திய சுற்றுலா துறை அமைச்சர், கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்து உள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:இந்தியாவுக்கு, ஆண்டு தோறும், 1.44 கோடி வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவர்களின் செலவினங்கள் வாயிலாக, 1.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, அன்னிய செலாவணி வருவாய் கிடைக்கிறது.அடுத்த ஐந்து ஆண்டுகளில், வெளிநாட்டு சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை, நான்கு கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதன் மூலம், சுற்றுலா துறையில், 10 கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுவர். தற்போது, 4.30 கோடி பேர், இத்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.நட்சத்திர ஓட்டல்களில், 7,500 ரூபாய்க்கு மேல் உள்ள அறை வாடகைக்கு விதித்துள்ள, ஜி.எஸ்.டி.,யை குறைக்க வலியுறுத்தப்படும். மேலும், ஓட்டல்களுக்கு, அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து வழங்கினால், குறைந்த வட்டியில் கடன் பெறலாம். மாநில அரசுகளும், ஓட்டல் கட்ட நிலம் ஒதுக்க முடியும்.மத்திய அரசு, தொழில் துவங்குவதை சுலபமாக்கி உள்ளது. இருந்த போதிலும், ஓட்டல் கட்ட, 70 வகை உரிமங்களை பெற வேண்டியுள்ளது; இது, எளிமையாக்கப்படும். தினம், 2,000 ரூபாய்க்கும் குறைவான வாடகை உள்ள, இரண்டு லட்சம் ஓட்டல் அறைகளுக்கு பற்றாக்குறை உள்ளது. அதனால், இப்பிரிவில் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
தத்தெடுப்புஇந்தியாவில், உலக பாரம்பரிய சின்னங்களாகவிளங்கும், ஏழு சுற்றுலா தலங்களை, பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தத்தெடுத்து உள்ளன. இவ்விடங்கள், சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும்.ராஷ்மி வர்மாசெயலர், மத்திய சுற்றுலா துறை
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|