பதிவு செய்த நாள்
26 அக்2017
23:44

சென்னை : தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த,போலாரிஸ் கன்சல்ட்டிங் அண்டு சர்வீசஸ் நிறுவனம், பங்குச் சந்தைகளின் பட்டியலில் இருந்து வெளியேற, முடிவு செய்துள்ளது.
அருண் ஜெயின் என்பவரால் துவக்கப்பட்ட, போலாரிஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை, 2016 மார்ச்சில், விர்டுசா கன்சல்ட்டிங் சர்வீசஸ் நிறுவனம் கையகப்படுத்தியது.இதையடுத்து, இந்நிறுவனம், போலாரிஸ் நிறுவனத்தின் எஞ்சிய பங்குகளையும் வாங்க திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, விர்டுசா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போலாரிஸ் கன்சல்ட்டிங் அண்டு சர்வீசஸ் நிறுவனம், பங்குச் சந்தைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. ‘இதன் மூலம், இந்நிறுவனத்தின் முழு உரிமையை, விர்டுசா நிறுவனம் பெறும்’ என, கூறப்பட்டுள்ளது.
போலாரிஸ் கன்சல்ட்டிங் அண்டு சர்வீசஸ் நிறுவனத்தில், 74.40 சதவீத பங்கை, விர்டுசா கன்சல்ட்டிங் சர்வீசஸ் வைத்துள்ளது.நிர்வாகச் செலவுகளை மிச்சப்படுத்தி, ‘செபி’யின் கட்டுப்பாடுகள் இன்றி, சுதந்திரமாக செயல்படும் நோக்கில், போலாரிஸ், பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேற முடிவு செய்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|