பதிவு செய்த நாள்
26 அக்2017
23:45

புதுடில்லி : சுலபமாக தொழில் துவங்கும் வசதி உள்ள நாடுகளின் பட்டியலை, ஆண்டுதோறும், உலக வங்கி வெளியிடுகிறது.
இந்த பட்டியலில், இந்தாண்டு, இந்தியா, 130வது இடத்தில் இருந்தது. அடுத்த ஆண்டுக்கான பட்டியல், 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்த பட்டியலில், இந்தியா, இந்தாண்டை விட, பல படி முன்னேறி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர், ரமேஷ் அபிஷேக் கூறியதாவது: இந்தியாவில் சுலபமாக தொழில் துவங்க, பல்வேறு சீர் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. தொழில் உரிமங்கள் பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
கட்டுமான திட்டங்கள், புதிய தொழில்களை துவங்குவதற்கான உரிமங்கள் ஆகியவற்றை, விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், திவால் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம் போன்றவற்றின் அறிமுகமும், இந்தியாவில் தொழில் துவங்குவதற்கான சூழலை சுலபமாக்கி உள்ளது. அதனால், உலக வங்கியின் பட்டியலில், இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|