ஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு நிறுவனங்கள் அறிவிப்புஜி.எஸ்.டி., வரிச்சுமை குறைந்ததால்...நுகர்பொருட்கள் விலை குறைப்பு தயாரிப்பு ... ... அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! அர­சி­யல் தோற்­க­லாம்; பொரு­ளா­தா­ரம் தோற்­ற­தில்லை! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
அதிக செயல்­தி­ற­னுக்­கான எளிய வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2017
23:47

‘பெரி­தாக யோசி­யுங்கள்; ஆனால், ஒரு குறிப்­பிட்ட விஷ­யத்தில் கவனம் செலுத்­துங்கள்; உங்கள் செயல்­திறன் பல மடங்கு அதி­க­ரிக்கும்’ என, வலி­யு­றுத்தும் வகையில், ‘தி ஒன் திங்’ புத்­த­கத்தை, கேரி கெல்லர் எழுதி இருக்­கிறார்.


ஒரே நேரத்தில், பல விஷ­யங்­களில் கவனம் செலுத்­தாமல், ஒரு குறிப்­பிட்ட விஷ­யத்தில் மட்டும் கவனம் செலுத்­தினால், நிச்­சயம் வெற்றி பெறலாம். இது தான், ரக­சியம். எல்­லா­ருக்கும், ஒரு நாளில், ஒரே அளவு நேரம் தான் இருக்­கி­றது. அப்­படி இருக்க, ஒரு சிலர் மட்டும், எப்­படி மற்­ற­வர்­களை விட, அதிக வேலை­களை செய்து முடிக்­கின்­றனர். அவர்­களால் மட்டும், எப்­படி அதிகம் சம்­பா­திக்க முடி­கி­றது. இந்த கேள்­விக்­கான பதில், அவர்கள் அணு­கு­மு­றையின் மையத்தில் இருக்­கி­றது. அவர்கள், எல்­லா­வற்­றையும் சிறி­ய­தாக செய்­கின்­றனர். சிறி­ய­தாக செய்­வது என்றால், செய்­யக்­கூ­டிய எல்லா விஷ­யங்­க­ளையும் விட்டு விட்டு, செய்ய வேண்­டிய ஒரு விஷ­யத்தில் மட்டும் கவனம் செலுத்­து­வது.


‘எல்லா செயல்­களும், ஒரே வித­மாக முக்­கி­ய­மா­னவை அல்ல’ என்­பதை உணர்ந்து, செய்ய வேண்­டிய சரி­யான செயலை கண்­ட­றி­வ­தாகும். உங்­க­ளுக்கு மிகவும் தேவை­யான விஷ­யத்­துடன் தொடர்பு கொள்­வ­தற்­கான வழி­யாகும் இது.உங்கள் கவ­னத்தை குவிப்­பதன் மூலம், எப்­படி அபா­ர­மான முடி­வு­களை பெற முடியும் என, உணர்­வ­தற்­கான வழி இது. பெரும்­பா­லானோர், இதற்கு நேர் எதி­ராக செயல்­ப­டு­கின்­றனர். பெரிய வெற்­றிக்கு, அதிக காலம் தேவை மற்றும் சிக்­க­லா­னது என, நினைக்­கின்­றனர். அதன் கார­ண­மாக, அவர்­க­ளிடம், செய்ய வேண்­டிய வேலை­களின் பட்­டியல், பெரி­தாக இருக்­கி­றது. ஆனால், வெற்றி சாத்­தி­ய­மா­காமல், கிடைத்­ததை வைத்து திருப்தி அடை­கின்­றனர்.


பெரிய வெற்றி, சிறிய செயல்­களில் இருந்து கிடைக்கும் என்­பது தெரி­யாமல், நிறைய விஷ­யங்­களை முயன்று பார்த்து, குறை­வாக சாதிக்­கின்­றனர். காலப் போக்கில், அவர்கள் தங்கள் எதிர்­பார்ப்பை குறைத்து, கன­வு­க­ளையும் கைவி­டு­கின்­றனர். அதிக விஷ­யங்­களை செய்­வதில் உள்ள சிக்கல் என்­ன­வெனில், அது பலன் தந்­தாலும் கூட, எதையும் குறைக்­காமல், வேலை­களை அதி­க­மாக்­கு­வது நெருக்­க­டி­க­ளையும், துாக்­க­மின்­மை­யையும், ஆரோக்­கிய பாதிப்­பையும் உண்­டாக்கும். முக்­கிய தரு­ணங்­க­ளையும், குடும்­பத்­தி­ன­ரு­ட­னான நேரத்­தையும் இழக்க நேரிடும்.


சிறிய அளவில் செயல்­ப­டு­வது, அசா­தா­ர­ண­மான பலன்­களை அளிக்கக் கூடி­யது. ஒரு விஷ­யத்தில் மட்­டுமே கவனம் செலுத்­து­வதால், அது எப்­போதும் வெற்­றியை தரு­கி­றது. எனவே, உங்­க­ளுக்­கான ஒரு விஷ­யத்தை முதலில் தேர்வு செய்து அதில் கவனம் செலுத்­துங்கள்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)