பதிவு செய்த நாள்
26 நவ2017
03:25
ரிதும் எதிர்பார்க்கப்படும், டி.வி.எஸ்., நிறுவனத்தின், ‘அப்பாச்சி, ஆர்.ஆர்., 310’ பைக், டிச., 6ல் அறிமுகம் செய்யப்படுகிறது. இது, 2015ல், டில்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த, ‘புல்லி பேர்ட்’ வகை பைக்கில், ‘பி.எம்.டபிள்யு., ஜி 310’ பைக்கில் உள்ள இன்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது சிறப்பம்சம். இதில், ஒரே வேரியன்ட் தான் அறிமுகமாகிறது. எனினும், சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.இதன், பிரேம்கள் அனைத்தும், வாகனத்தின் வண்ணத்தோடு ஒத்துப்போகும் வகையில், அதே வண்ணத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் ஹேண்டில், நவீன வடிவில் இருந்தாலும், ஓட்டுபவருக்கு வசதியாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. பைக்கின் ஸ்திரத்தன்மைக்கு உதவும், பொன் நிறத்திலான, யு.எஸ்.டி., போர்க் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து, இப்போதைக்கு அதிக தகவல் இல்லை. புதிய, ஆர்.ஆர்., 310ல், பி.எம்.டபிள்யு., ஜி 310 ஆர்., பைக்கில் உள்ள, 34 எச்.பி., திறனை உற்பத்தி செய்யும், ‘313 சிசி, லிக்விட் கூல்டு, இன்ஜின்’ இடம் பெறுவது உறுதி. போட்டியாளர்களான, ‘கே.டி.எம்., 250; டியூக்’ போன்றவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில், விலை நிர்ணயிக்கப்படும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|