அப்­பாச்சி ஆர்.ஆர்., 310: டிச., 6ல் அறி­மு­கம்அப்­பாச்சி ஆர்.ஆர்., 310: டிச., 6ல் அறி­மு­கம் ... மத்திய அரசு அறிவிப்பு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு  வரிச்சலுகை 2 சதவீதம் உயர்வு மத்திய அரசு அறிவிப்பு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு வரிச்சலுகை 2 சதவீதம் ... ...
ஜி.எஸ்.டி., - அறி­வோம் -– தெளி­வோம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2017
03:26

மிக பிர­மாண்­ட­மான தொழில்­நுட்­பத்­து­டன்வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள, ஜி.எஸ்.டி., திட்­டத்­தின் பயன் என்ன?ஜி.எஸ்.டி., திட்­டத்­தின்­படி, ஒரு பொருள் உற்­பத்­தி­யா­கும் இடத்­தில் இருந்து, கடை­சி­யில் யார் வாங்­கி­னர் என்­பது வரை, அத்­தனை விப­ரங்­க­ளை­யும், சங்­கிலி தொடர் போல் கணிப்­பொறி பதிவு செய்து விடும். எங்­கா­வது ஒரு தவறு நடந்­தால் கூட, அது, எந்த இடத்­தில் நடந்­தி­ருக்­கிறது என்­பதை, கணிப்­பொறி காட்­டிக் கொடுத்து விடும்.இனி, வரி முறை­கே­டு­கள் தொடர்­பாக, பொறி வைத்து யாரை­யும் பிடிக்க வேண்­டிய அவ­சி­யம், அதி­கா­ரி­க­ளுக்கு இல்லை. வியா­பா­ரி­களும், வர்த்­த­கத்தை மறைக்க முயற்­சிக்­கவோ, அதற்கு அதி­கா­ரி­கள் துணை போகவோ முடி­யாது.ஜி.எஸ்.டி., எதற்கு என்­ப­தற்கு, அரசு முன்­வைக்­கும் கார­ணங்­கள்1. ‘ஒரே நாடு; ஒரே வரி; ஒரே சந்தை; ஒரே விலை’ என்ற நடை­மு­றையை கொண்டு வர2. வரி மேல் வரி விதிக்­கப்­ப­டு­வதை தவிர்க்க3. இந்­தி­யா­வில், மத்­திய அரசு வரி விதி­கள் மற்­றும் ஒவ்­வொரு மாநில அர­சுக்­கும் தனி வரி விதி­கள் என, பல சட்­டங்­கள் இருக்­கின்றன. அவற்றை ஒருங்­கி­ணைத்து, ஒரே சட்­ட­மா­கக் கொண்டு வர4. இது­வரை, சட்­டத்­தில் இருந்த ஓட்­டை­களை பயன்­ப­டுத்தி, வர்த்­த­கத்தை முறை­யாக பதிவு செய்­யா­மல், மிகக் குறைந்த வரு­மா­னமே வரு­வ­தாக பொய் கணக்கு காட்டி, வரி செலுத்­தா­மல் இருப்­போரை, வரி செலுத்த வைக்க5. ஒரு பொருள் உற்­பத்தி செய்­யப்­பட்­ட­தில் இருந்து, எங்­கெல்­லாம் சப்­ளை­யாகி, யார் இறு­தி­யாக வாடிக்­கை­யா­ள­ரி­டம் விற்­றார் என்­பது வரை­யான, முழு வணிக பய­ணத்­தை­யும் (Audit Trial) கணி­ணி­ம­ய­மாக்க.28 சத­வீத வரி விதிப்­பிற்கு உட்­பட்ட, பொருட்­களின் எண்­ணிக்கை எவ்­வ­ளவு?நவ., 15ல், 178 பொருட்­க­ளுக்­கான வரி, 28லிருந்து 18 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்டு உள்­ளது. தற்­போது, 50 பொருட்­க­ளுக்கு மட்­டுமே, 28 சத­வீத வரி உள்­ளது.வரி குறைப்­பால், பொருட்­கள் விலை குறை­யுமா?கண்­டிப்­பாக குறை­யும். உதா­ர­ண­மாக, ஒயர், பர்­னிச்­சர், மெத்தை, சூட்­கேஸ், சல­வைத் துாள், ஷாம்பூ, மின் விசிறி, விளக்கு, ரப்­பர் டியூப், சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட சர்க்­கரை, நீரி­ழிவு நோயா­ளி­களின் உணவு, மருத்­துவ ஆக்­சி­ஜன், மூக்கு கண்­ணாடி, தொப்பி, உரு­ளைக்­கி­ழங்கு பவு­டர் உள்­ளிட்ட, பல பொருட்­களின் விலை குறைந்­துள்­ளது.விலை குறைப்பு பலனை, நுகர்­வோர் முழு­மை­யாக பெறு­வ­தற்கு, என்ன வழி­முறை செய்­யப்­பட்டு உள்­ளது?வரி குறைப்­புக்கு பின், விலை குறைக்­கப்­பட்ட பொருட்­களின் விற்­ப­னையை கண்­கா­ணிக்க, என்.ஏ.ஏ., எனப்­படும், அதிக லாப தடுப்பு ஆணை­யம் அமைக்க, மத்­திய அமைச்­ச­ரவை குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. விலை குறைப்பு பலனை, நுகர்­வோர் முழு­மை­யாக பெறு­வ­தற்கு, இந்த ஆணை­யம் உத­வும்.ஜி.எஸ்.டி., குறித்து புகார் அளிக்க, ஏதே­னும் வழி உள்­ளதா? எங்கு அளிக்­க­லாம்?நிதி அமைச்­ச­கத்­துக்கு உரிய ஆதா­ரங்­க­ளு­டன், புகார்­களை அனுப்­ப­லாம். www.cbecmitra.helpdesk@icegate.gov.in; www.gstn.org வலை­த­ளங்­கள் வாயி­லா­க­வும் புகார் தெரி­விக்­க­லாம். மத்­திய அர­சின் உதவி மையத்தை, 1800 1200 232 என்ற எண்­ணில் அணு­க­லாம்; மாநில அர­சின் உதவி மையங்­களை, 0120 488 8999, 1800 103 6751ல் தொடர்பு கொண்டு புகார் தெரி­விக்­க­லாம். ஜி.எஸ்.டி., கவுன்­சில் இணை­ய­த­ளத்­தி­லும், புகார் தெரி­விக்­கும் வசதி உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)