மத்திய அரசு அறிவிப்பு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு  வரிச்சலுகை 2 சதவீதம் உயர்வுமத்திய அரசு அறிவிப்பு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதிக்கு வரிச்சலுகை 2 சதவீதம் ... ... ஓட துவங்­கி­விட்­டதா ஜி.டி.பி., தேர்? ஓட துவங்­கி­விட்­டதா ஜி.டி.பி., தேர்? ...
இ.டி.எப்., எனும் முத­லீட்டு புரட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
00:59

அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­யின் முக்­கிய அங்­க­மாக இயங்­கும் முத­லீட்டு கருவி, இ.டி.எப்., என்று அழைக்­கப்­படும், ‘எக்ஸ்­சேஞ்ச் டிரே­டட் பண்டு’. வான்­கார்டு என்ற நிறு­வ­னம், இந்த வகை முத­லீட்டு முறையை பிர­ப­லப்­ப­டுத்­தி­யது. முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, குறைந்த நிர்­வாக செல­வில், தங்­கள் சேமிப்பை செலுத்தி, அதில் நெடுங்­கால வெற்றி ஏற்­ப­டுத்­தும் எளிய கரு­வியே இ.டி.எப்.

இதன் முத­லீ­டு­கள் குறிப்­பிட்ட சந்தை குறி­யீ­டு­கள் சார்ந்து மட்­டுமே அமை­யும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தெளி­வான, வெளிப்­ப­டை­யான பங்கு தேர்­வு­கள், நிலை­யான முத­லீட்­டுக் கொள்­கை­கள், மற்­றும் சிறந்த நிறு­வ­னங்­கள் கொண்டு மட்­டுமே அமை­யும் குறி­யீடு தேர்­வு­மு­றை­கள், அமெ­ரிக்க சந்­தை­யின் அப­ரி­மித வளர்ச்­சிக்கு வித்­தி­டச் செய்­தது.கடந்த, 40 ஆண்டு காலத்­தில், அமெ­ரிக்க சந்­தை­யில் முத­லீட்டு புரட்சி ஏற்­பட வான்­கார்டு நிறு­வ­ன­மும், இ.டி.எப்., முத­லீ­டும் முக்­கிய கார­ணம். சாமா­னி­ய­ரும், அமெ­ரிக்­கா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் பங்கு பெற இந்த முறை­யா­னது வழி­வ­குத்­தது. வான்­கார்­டின் அப­ரி­மித வளர்ச்­சி­யும் இ.டி.எப்., என்­ப­தால் மட்­டுமே அமைந்­தது என்­றால், அது மிகை­யா­காது.

பரஸ்­பர நிதி­களில் முத­லீடு செய்­வ­தை­விட, இ.டி.எப்., முறையை அமெ­ரிக்க ஆலோ­ச­கர்­களும், முத­லீட்­டா­ளர்­களும் அதி­கம் விரும்­பு­கின்­ற­னர். ஆனால், இந்­தி­யா­வில், பரஸ்­பர நிதி­களே இப்­போ­தும் செழிக்­கின்றன. இந்த சூழ­லில்­தான், ’பாரத் 22’ என்ற இ.டி.எப்., அபார வர­வேற்­போடு நம் சந்­தை­யில் நுழைந்­துள்­ளது. மூன்று தனி­யார் நிறு­வ­னங்­களும், இதர, 19 பொதுத்­துறை நிறு­வ­னங்­களும் கொண்டு கச்­சி­த­மாக அமைக்­கப்­பட்ட ஒரு தொகுப்­பு­தான் ’பாரத்22 இ.டி.எப்.’ இந்த திட்­டத்­தில் பங்கு தேர்­வு­கள் மாறாது. நிர்­வா­கச் செல­வு­கள் மிகக் குறைவு. இது இ.டி.எப். மட்­டுமே கொண்ட சிறப்பு அம்­சம். பரஸ்­பர நிதி­களில் இந்த அம்­சங்­கள் அதி­கம் தென்­ப­டு­வ­தில்லை. ஆனால், இதில் முத­லீடு செய்ய, டிமேட் கணக்கு அவ­சி­யம் என்­பதே இதன் குறை என்று கூற­லாம். இந்த திட்­டத்­தின் அபார வெற்றி, வரும் காலங்­களில் நடக்­கும் அர­சின் பங்­கு­வி­லக்­கல் திட்­டங்­க­ளுக்கு எளி­தில் வழி­வ­குக்­கும் என்றே தோன்­று­கிறது.

அர­சின் நவ­ரத்னா நிறு­வன பங்­கு­கள் விற்­ப­னை­யில், எதிர்­கொள்­ளும் அர­சி­யல் ரீதி­யான சிக்­கல்­க­ளுக்­கும் விடை கிடைக்­கும். யூ.டி.ஐ., சிறப்பு நிறு­வ­னம் மூலம், அரசு ஏற்ற ஐ.டி.சி., எல்&டி மற்­றும் ஆக்­சிஸ் வங்கி பங்­கு­களை யாருக்கு விற்­பது என்­ப­தில் உள்ள நடை­முறை சிக்­க­லும் இந்த கருவி மூலம் கடக்­கப்­பட்­டுள்­ளது. வரும் ஆண்­டு­களில், பங்­குச் சந்­தை­யில் சாமா­னி­ய­ரும் பங்­கு­பெற இ.டி.எப்., வழி­வ­குக்­கும் என, நாம் எதிர்­பார்க்­க­லாம். வெளிப்­ப­டைத்­தன்மை அம்­சத்­தில், பரஸ்­பர நிதியை விட, இ.டி.எப்., சிறந்­தது. வான்­கார்டு, அமெ­ரிக்க சந்­தை­யில் ஏற்­ப­டுத்­திய, இ.டி.எப்., முத­லீட்டு புரட்சி வரும் ஆண்­டு­களில், நம் நாட்­டில் எப்­படி வளர்ச்சி காணப் போகிறது என்­பதே துறை­சார் வல்­லு­னர்­களின் ஆவ­லான எதிர்­பார்ப்பு. குறை­யும் வட்டி விகி­தங்­களின் பாதிப்­பி­னால் சிர­மப்­படும் முத­லீட்­டா­ளர்­கள், தங்­கள் முத­லீட்­டில் இ.டி.எப்., முறைக்­கும் உரிய ஆலோ­சனை பெற்று இடம் ஒதுக்­க­லாம். சந்­தை­யில் பங்­கேற்க தயங்­கும் ஆரம்ப முத­லீட்­டா­ளர்­ களும் இ.டி.எப்., முறையை தேர்­வு­செய்து, அவற்­றில் தமக்­கேற்ற, இ.டி.எப்., திட்­டத்­தில் முத­லீடு செய்­ய­லாம்.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)