இ.டி.எப்., எனும் முத­லீட்டு புரட்சிஇ.டி.எப்., எனும் முத­லீட்டு புரட்சி ... வாடகை ஒப்­பந்­தத்தில் கவ­னிக்க வேண்­டி­யவை! வாடகை ஒப்­பந்­தத்தில் கவ­னிக்க வேண்­டி­யவை! ...
ஓட துவங்­கி­விட்­டதா ஜி.டி.பி., தேர்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2017
01:01

ஏப்­ரல் _ ஜூன் காலாண்­டின் முடி­வில், ஜி.டி.பி., எனப்­படும், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 5.7 சத­வீத அள­வுக்கே வளர்ந்­தது என்ற செய்தி வெளி­யான போது, பங்­குச் சந்­தை­யில் மட்­டு­மல்ல, பொது­மக்­கள் மத்­தி­யி­லும் லேசான அதிர்ச்சி. தற்­போது, நவம்­பர் 30ம் தேதி, ஜூலை – செப்­டம்­பர் காலாண்­டுக்­கான ஜி.டி.பி., விகி­தம் வெளி­வ­ரப் போகிறது. இப்­போது நிலைமை என்­ன­வாக இருக்­கும்?

வளர்ச்சி விகி­தம், 6.2 – 6.3 சத­வீ­த­மாக இருக்­கும் என்று எதிர்­பார்ப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார், நிதி ஆயோக் துணைத் தலை­வர், ராஜீவ் குமார். பொரு­ளா­தா­ரத் துறை செய­ல­ரான, சுபாஷ் சந்­திர கார்க், ‘பொரு­ளா­தா­ரச் சரிவு முடிந்­து­விட்­டது; இனி­மேல் உயர்­வு­தான்’ என்று நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.இன்­னொரு பக்­கம், பல்­வேறு சர்­வ­தேச தர­ நிர்­ணய நிறு­வ­னங்­கள், இந்­தி­யா­வின் ரேட்­டிங்கை உயர்த்­தவோ, அல்­லது அப்­ப­டியே வைத்­தி­ருக்­கவோ செய்­தி­ருக்­கின்றன. எல்­லோ­ருமே பண­ம­திப்­பி­ழப்பு, ஜி.எஸ்.டி., புதிய தி வால் சட்­டம் ஆகி­யவை எதிர்­கா­லத்­தில் பலன் அளிக்­கப் போகின்றன; அத­னால், வளர்ச்­சிக்­குப் பாதிப்பு இருக்­காது என, நம்­பிக்கை வார்த்தை சொல்­கின்றனர்.இவர்­கள் சொல்­வ­தைக் கேட்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது. சென்ற காலாண்­டில் ஏற்­பட்ட சரி­வுக்­கு பல்­வேறு கார­ணங்­கள் அல­சப் ­பட்­டு­விட்­டன. அவற்­றி­லி­ருந்து நாம் மீண்­டு­விட்­டோமா என்­ப­தைத் தெரிந்­து­ கொள்­ வ­தில் தான் சுவா­ர­சி­யமே இருக்­கிறது.

ஜி.எஸ்.டி., அம­லா­வ­தற்கு முன்பு, கையி­லி­ருந்த சரக்­கு­களை விற்­று­வி­டும் பர­ப­ரப்­பில், பல்­வேறு நிறு­வ­னங்­கள் அப்­போது இருந்­தன. புதிய உற்­பத்தி மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. ஜூலை முதல் ஜி.எஸ்.டி., அம­லான பின், பல்­வேறு துறை­களில் மீண்­டும் உற்­பத்தி துவங்­கி­யது. இத­னால் தான், தொழிற்­சாலை உற்­பத்தி குறி­யீடு, பர்­சே­ஸிங் மேனே­ஜர்­கள் குறி­யீடு, ஏற்­று­ம­தி­கள் ஆகி­யவை ஏறு­மு­கம் காட்­டி­உள்ளன. மேலும், பண்­டி­கைக் காலம் கொஞ்­சம் முன்­ன­தா­கவே துவங்­கி­ய­தால், விற்­ப­னை­களும், அதற்­கான உற்­பத்­தி­யும் ஆரம்­பித்­தன. ஜி.டி.பி., கணக்­கீட்­டின் ஒரு அல­காக இருப்­பது மொத்த மதிப்பு கூட்­டல் (ஜி.வி.ஏ.).ஜூன், 2016ல், 7.6 சத­வீ­த­மாக இருந்த ஜி.வி.ஏ., செப்­டம்­பர், 2016ல், 6.8 சத­வீ­த­மாக சரிந்­தது. இந்­தக் குறை­வான அடித்­த­ளத்­தில் இருந்து, ஜி.டி.பி.,யைக் கணக்­கி­டும்­போது, ஜூலை – செப்., 2017 காலாண்­டின் வளர்ச்சி விகி­தம் உயர்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு.

கவ­னிக்­க­ வேண்­டிய இரண்டு மூன்று அம்­சங்­களும் உள்ளன. முக்­கி­ய­மாக, இந்த காலாண்­டில் அர­சின் முத­லீ­டு­கள் ஏற்­ப­டுத்­தி­யுள்ள முன்­னேற்­றம் என்ன? சென்ற ஆண்டு இதே காலாண்­டில், இந்­திய அரசு செல­வ­ழித்த தொகை, 5,15,896 கோடி ரூபா­யோடு ஒப்­பி­டும்­போது, இந்த ஆண்டு அது செல­வ­ழித்­துள்­ளதோ, 4,98,456 கோடி ரூபாய்­தான். இதே­போல் மூல­த­னச் செல­வு­களும் சென்ற ஆண்­டை­வி­டக் குறைவே. கடந்த மூன்­றரை ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக, ஜூலை – செப்., 2017 காலாண்­டில் தான் இத்­தகைய செல­வுச் சரிவு நடந்­துள்­ளது.செப்­டம்­பர், 2016ல் விவ­சா­யத் துறை­யில் ஏற்­பட்ட வளர்ச்சி, 4.1 சத­வீ­தம். இந்த ஆண்டோ, கரீப் பருவ விவ­சா­யம் தள்­ளாட்­டம் கண்­டு உள்­ளது. மேலும் பல மாநி­லங்­களில் நடந்த விவ­சா­யி­களின் போராட்­டங்­கள் கார­ண­மாக, விளைச்­சல் எவ்­வ­ளவு தூரம் உயர்ந்­துள்­ளது என்று பார்க்க வேண்­டும்.இதை­விட முக்­கி­யம், தனி­யார் துறை முத­லீ­டு­கள். ஜி.எஸ்.டி., அமல்­ப­டுத்­தப்­பட்ட போது தேங்­கிப் போன முத­லீ­டு­கள் மீண்­டும் தொழில்­து­றைக்­குள் வந்­தி­ருக்­கின்­ற­னவா? உற்­பத்தி பெரு­கி­னவா என்று தெரி­ய­வேண்­டும். ஜி.எஸ்.டி.,யின் தாக்­கத்­தி­லி­ருந்து, பெரிய கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் மீண்­டு­விட்­டன.

அதே­போல், அவற்­றின் நம்­பிக்­கை­யும் பெரு­கி­யுள்ளன. மிகச் சிறு, சிறு, குறுந்­தொ­ழில் செய்­வோர் மத்­தி­யில் இன்­னும் நம்­பிக்கை பெரு­க­வில்லை.இந்­தச் சூழ்­நி­லை­யில், செப்­டம்­பர் மாதம், தொழில்­முறை கணிப்­பா­ளர்­கள் மத்­தி­யில், ஆர்.பி.ஐ., நடத்­திய ஆய்­வில் தெரிய வரும் விப­ரங்­கள் இவை: விவ­சா­யம், 3 சத­வீ­தம் உயர, தொழில்­துறை, 4 சத­வீ­த­மா­க­வும், சேவை­கள், 7.9 சத­வீ­த­மா­க­வும் வள­ரும். மொத்த மதிப்பு கூட்­டல், 6.2 சத­வீ­த­மாக இருக்க, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 6.5 சத­வீ­த­மாக இருக்­க­லாம் என்­பது கணிப்பு.உற்­பத்தி பக்­கம் மட்­டுமே பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம், நுகர்­வோர் பக்­கம் என்ன ஆகி­யி­ருக்­கிறது என்­றும் கணிக்­க­வேண்­டும். நுகர்­வோர் மத்­தி­யில், சந்­தை­யில் செலவு செய்து, புதிய பொருட்­க­ளையோ, சேவை­க­ளையோ பெறு­வ­தற்­கான நம்­பிக்கை உயர்ந்­தி­ருக்­கி­றதா? அதை­யும் உள்­ள­டக்­கி­யதே ஜி.டி.பி., கணக்­கீடு.

ஜூன் மாத காலாண்­டில், ‘வர்த்­த­கம், ஓட்­டல்­கள், போக்­கு­வ­ரத்து, கிடங்கு மற்­றும் தொலை­தொ­டர்பு’ என்ற தொகுதி மட்­டும், 11.1 சத­வீத அள­வுக்கு வளர்ந்­தி­ருந்­தது. அதே­போன்ற வலு­வான வளர்ச்சி மீண்­டும் இந்­தக் காலாண்­டி­லும் இருக்­குமா? சரி­யுமா? செப்­டம்­பர் மாதம் எடுக்­கப்­பட்ட, ஆர்.பி.ஐ.,யின் நுகர்­வோர் நம்­பிக்கை குறி­யீடு சரிந்தே இருந்­தது என்­ப­தை­யும் தொழில்­துறை எதிர்­பார்ப்­பில் தொய்வு இருந்­தது என்­ப­தை­யும் இத­னோடு சேர்த்தே பார்க்­க­வேண்­டும்.இதை­யெல்­லாம் கணக்­கில் எடுத்­து­கொண்டு பார்க்­கும்­போது, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, ஜூலை – செம்­டம்­பர் காலாண்­டில், 6 – 6.2 சத­வீ­தம் வரை இருக்­க­லாம் என்­பதே பொரு­ளா­தார நிபு­ணர்­கள் கருத்து. இதே நிலை தொட­ரு­மா­னால், 2017 – 18 இரண்­டாம் அரை­யாண்­டில் ஜி.வி.ஏ., 7 சத­வீ­தத்­துக்­கும் சற்­றுக் கூடு­த­லாக இருக்­க­லாம் என்­பதே எதிர்­பார்ப்பு.

ஜி.டி.பி., வளர்ச்சி அனைத்­துத் துறை­யி­லும் பிர­தி­ப­லித்­தி­ருக்­குமா? வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கி­யி­ருக்­குமா என்­றெல்­லாம் கேள்­வி­கள் எழ­லாம். ஒவ்­வொரு முறை­யும், வேறு வேறு துறை­கள் விழித்­தெ­ழுந்து, வளர்ச்­சிக்கு உந்­து­சக்­தி­யாக இருந்­துள்ளன. இந்த முறை அந்­தப் பாரத்­தைத் தோளில் சுமக்­கும் துறை எதுவோ? ஆனால், ஒரு விஷ­யம் உண்மை. ஜி.டி.பி., அளவு உய­ரு­மா­னால், மத்­தி­ய­மர்­கள், தொழில்­செய்­வோர், அரசு ஊழி­யர்­கள் மத்­தி­யில் கொஞ்­சம் தைரி­யம் பிறக்­கும். நாம் சரிவை நோக்­கிப் போக­வில்லை, தாக்­குப் பிடித்­து­விட்­டோம் என்ற துணிச்­சல் வரும். இந்த நம்­பிக்­கையே, அவர்­களை மேன்­மே­லும் பொருட்­களை வாங்­க­வும், அதன்­மூ­லம் சந்தை விரி­வ­டை­ய­வும் வாய்ப்­ப­ளிக்­கும். தனி­யார் முத­லீ­டு­கள் பெருக, இதுவே அடிப்­படை. சிக்­கிக்­கொண்­டி­ருந்த ஜி.டி.பி., தேர், மீண்­டும் ஓடத் தொடங்­கி­ விட்­டதா என்­பது பற்றி நவம்­பர், 30ம் தேதி தெரிந்­து­வி­டும்.
-ஆர்.வெங்­க­டேஷ்பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)