பதிவு செய்த நாள்
05 டிச2017
00:30

புதுடில்லி:‘‘இந்தியாவில், ‘ஆயுஷ்’ துறையில், 2020ல், 2.60 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார்.ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய, ‘ஆயுஷ்’ துறையின் வளர்ச்சி குறித்து, அவர் மேலும் பேசியதாவது:உள்நாட்டில், ஆயுஷ் துறையின் சந்தை மதிப்பு, 500 கோடி ரூபாய்; ஏற்றுமதி, 200 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.இத்தகைய பாரம்பரிய ஆரோக்கிய பராமரிப்பு துறையில், ‘ஸ்டார்ட் அப்’ தொழில் துவங்க விரும்பும் இளைஞர்களுக்கு, எண்ணற்ற வர்த்தக வாய்ப்புகள் காத்திருக்கின்றன.மக்களுக்கு, பாரம்பரிய மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஆயுஷ் துறையில், அனைத்து நாடுகளுடன் இணைந்து செயலாற்ற, இந்தியா ஆர்வமாக உள்ளது.இதற்காக, ஆயுஷ் துறையில், 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில், மருத்துவ குணமுள்ள, 6,600க்கும் அதிகமான மூலிகை செடிகள் உள்ளன. மூலிகை மருத்துவ பொருட்கள் ஏற்றுமதியில், இந்தியா, இரண்டாவது இடத்தில் உள்ளது.நாட்டின் ஆரோக்கிய பராமரிப்பு துறையில், ஆயுஷ் மருத்துவத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஒன்றிணைத்து, மருத்துவ துறையை முன்னேற்றும் வாய்ப்பு, தற்போது கிட்டிஉள்ளது.இதனால், ஆயுஷ் துறையில், அடுத்த மூன்று ஆண்டுகளில், 2.60 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.நேரடியாக, 10 லட்சம் பேரும், மறைமுகமாக, 2.50 கோடி பேரும் வேலைவாய்ப்பு பெறுவர்.வரும், 2022ல், ஆயுஷ் துறையின் சந்தை மதிப்பு, மூன்று மடங்கு அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|