பதிவு செய்த நாள்
13 ஜன2018
00:10

புதுடில்லி:‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு, 2017- – 18ம் நிதியாண்டின், அக்., – டிச., வரையிலான காலாண்டில், 38.3 சதவீதம் அதிகரித்து, 5,129 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3,708 கோடி ரூபாயாக இருந்தது.
இதன் வருவாய், 3 சதவீதம் அதிகரித்து, 17,273 கோடி ரூபாயில் இருந்து, 17,794 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. டாலர் மதிப்பில், நிகர லாபம், வருவாய் ஆகியவை, முறையே, 79.86 கோடி மற்றும் 270 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்நிறுவனம், அமெரிக்க அரசுடன் முன்கூட்டிய விலை ஒப்பந்தம் செய்து உள்ளதால், வருமான வரிக்கு ஒதுக்கிய தொகையில், 1,432 கோடி ரூபாய் திரும்ப பெற்றுள்ளது.இத்துடன், மதிப்பீட்டு காலாண்டில் லாபமும் அதிகரித்து உள்ளதால், ஒரு பங்கிற்கு, 6.29 ரூபாய் அடிப்படை வருவாயாக கிடைத்துள்ளது.
‘இன்போசிஸ்’ தலைமை செயல் அதிகாரியாக, சலீல் பரேக், கடந்த, 2ல் பொறுப்பேற்ற பின், வெளியாகும் முதல் காலாண்டு அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐ.டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|