பதிவு செய்த நாள்
08 பிப்2018
02:32

புதுடில்லி : மத்திய அரசு, காதி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களை, நாடு தழுவிய அளவில் பிரபலப்படுத்த திட்டமிட்டு உள்ளது.இதற்காக, பிக்பஜார், ஸ்டாப்பர்ஸ் ஷாப், பேன்டலுான்ஸ் உள்ளிட்ட, 30 பெரிய நிறுவனங்களின் கடைகளில், காதி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு என, தனி பிரிவு ஏற்படுத்தப்பட உள்ளது.இது குறித்து, மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர், கிரண் ரிஜிஜு கூறியதாவது:பொதுவாக, காதி என்றாலே, பழைய தலைமுறையினரின் ஆடைகள் என்ற எண்ணம் மக்களுக்கு உள்ளது. ஆனால், நவீன ஆடைகளுக்கு நிகராக, காதி ஆடைகள் உருவாக்கப்படுகின்றன. இவை, காதி பவன் என்ற பிரத்யேக கடைகளில் மட்டும் விற்கப்படுவதால், பரவலாக மக்களை சென்றடையாத நிலை உள்ளது.அதனால், பிக் பஜார் போன்ற பெரிய நிறுவனங்களின் கடைகளில், காதி ஆடைகளுக்கு தனி பிரிவு ஏற்படுத்தப்படும். இதன் மூலம், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்; கைவினைஞர்களின் வாழ்வாதாரம் உயரும். நாடு முழுவதும், 800 காதி கிராமங்களை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|