பதிவு செய்த நாள்
08 பிப்2018
21:09

கிரேட்டர் நொய்டா : அமெரிக்காவைச் சேர்ந்த, ‘கிளீவ் லேண்டு’ நிறுவனம், இந்தியாவில், ஏஸ் மற்றும் மிஸ்பிட் என்ற இரண்டு மாடல்களில், நான்கு வகையான இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
இவை, கிரேட்டர் நொய்டாவில், ‘ஆட்டோ எக்ஸ்போ’ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இந்நிறுவனம், இந்தியாவில், லைஷ் மேடிசன் மோட்டார் வெர்க்ஸ் நிறுவனத்துடன் கூட்டு வைத்து, மஹாராஷ்டிர மாநிலம், புனேவில், வாகன, ‘அசெம்பிளிங்’ ஆலையை அமைத்து உள்ளது.
இது குறித்து, லைஷ் மேடிசன் மோட்டார் வெர்க்ஸ் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி, பிரனவ் டி தேசாய் கூறியதாவது: இந்தியாவில், ‘ஏஸ்’ பிரிவில், 229 ‘சிசி’ இன்ஜின் உள்ள, ஏஸ் டீலக்ஸ், ஏஸ் ஸ்கிராம்ளர், ஏஸ் கபே ஆகியவையும், மிஸ்பிட் மாடலில், 229 ‘சிசி’ ஏர்கூல்டு இன்ஜின் உள்ள, ‘ஜென் 2 மிஸ்கிட்’ வாகனத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளோம்.
அடுத்த ஆண்டுக்குள், 5,000 வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம். புனே தொழிற்சாலை, 35 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்டது. தற்போது, வாகன விற்பனையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|