பதிவு செய்த நாள்
08 பிப்2018
21:12

புதுடில்லி : ‘‘வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காயின்’ போன்ற மெய்நிகர் கரன்சிகளின் பரிவர்த்தனைகள், ‘பொன்ஸி’ எனப்படும், மோசடி திட்டங்கள் போன்றவை,’’ என, உலக வங்கி தலைவர், ஜிம் யங் கிம் காட்டமாக தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காயின்’உள்ளிட்ட மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைகளை, உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதில், பெரும்பாலான மெய்நிகர் கரன்சிகள், ‘பொன்ஸி’ திட்டங்கள் போன்றவை என, கூறப்படுகிறது.
இந்த மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைகள், எப்படி சாத்தியமாகும் என, எனக்கு இன்னும் தெளிவாக விளங்கவில்லை. மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைகள், ‘பிளாக் செயின்’ தொழில்நுட்பத்தில், தன்னிச்சையான செயல்பாட்டில் நடைபெறுகின்றன.இந்த தொழில்நுட்ப செயல்பாடு குறித்தும், தீவிரமாக ஆராய்கிறோம்.
வளரும் நாடுகள், இந்த தொழில்நுட்பத்தை, அங்கீகரிக்கப்பட்ட கரன்சி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பணம் செல்லும் பாதையை கண்டுபிடிக்க, இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. அதனால், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஊழலை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|