பதிவு செய்த நாள்
16 பிப்2018
00:16

சென்னை:ரெப்கோ
வீட்டுவசதி கடன் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது, முறைகேடு
செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு, எந்த ஆதாரமும் இல்லை என,
சி.பி.ஐ., நீதிமன்றம் கூறி, முதல் தகவல் அறிக்கையை முடித்து வைத்துள்ளது.
கடந்த 2016 அக்டோபர் மாதம், கோவை, ‘துர்கா ஏஜன்சிஸ்’ என்ற நிறுவனம், வாங்கிய கடனை முன்னதாகவே திருப்பிச் செலுத்தியது.அப்போது,
அதற்கான அபராதத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு
இருப்பதாக கூறி, ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவனத்தின், மேலாண்மை
இயக்குனர், வரதராஜன், செயல் இயக்குனர், ரகு, உதவி பொது மேலாளர்,
சேகர் ஆகியோர் மீது, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.
இது
குறித்து, மேலாண்மை இயக்குனர் அப்போது கூறுகையில், ‘‘எந்த
முறைகேடும் நடக்கவில்லை; வங்கியில் தவறு செய்த சில அதிகாரிகள்
மீது நடவடிக்கை எடுத்ததால், அவர்கள் பொய்யான புகாரை கொடுத்திருக்கின்றனர்,’’ என்றார்.
இந்நிலையில், சி.பி.ஐ., நீண்ட விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில்,
முறைகேடு நடைபெற்றதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு, எந்த
ஆதாரமும் இல்லை என்றும், ‘தவறான தகவல்’ என்ற அடிப்படையில், முதல்
தகவல் அறிக்கையை முடித்து வைக்கலாம் என கோரியது.
இதை ஏற்று,
கோவை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கையை முடித்து
வைத்தது. மேலும், கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும்
சொத்துகளை திரும்ப அளிக்கவும் உத்தரவிட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|