பதிவு செய்த நாள்
26 பிப்2018
04:46
முதலீட்டாளர்கள் மத்தியில், மியூச்சுவல் பண்ட் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பான மோசடி, பங்குச்சந்தையில் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கியிருந்தாலும், மியூச்சுவல் பண்ட் முதலீட்டின் அடிப்படை, அவசியத்தை உணர்வதற்கான சரியான வாய்ப்பாக, நிதி வல்லுனர்கள் இதை கருதுகின்றனர்.
பங்குகள் மீதான தாக்கம்: வங்கி மோசடி செய்தி, பங்குகள் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியது, இயல்பாகவே சமபங்கு முதலீடு ஆபத்தானதா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது. ஆம், பங்குச்சந்தை முதலீடு ஏற்ற இறக்கத்திற்கு உள்ளாக கூடியவை தான். ஆனால் இது போன்ற நிகழ்வுகள் தனி பங்குகள் மீது தான் தாக்கம் செலுத்துமே தவிர மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் தாக்கம் குறைவாகவே இருக்கும்.
முதலீடு பரவலாக்கம்: மியூச்சுவல் பண்ட்களின் பலனே அவை பரவலாக முதலீடு செய்வது தான். ஒரு சில பங்குகளை மட்டும் நாடாமல், நிதிகளின் நோக்கத்திற்கு ஏற்ப அவை, பலவிதமான பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்கின்றன. இவற்றில் ஒரு சில பங்குகள் சரிந்தாலும் மற்றவை ஈடு செய்யும். எனவே ஒரு தனி பங்கின் சரிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.இந்த பரவலாக்கமே ரிஸ்க்கை குறைக்கிறது.
பாதுகாப்பு அம்சம்: பொதுவாக நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வது ரிஸ்கானதாக அமைகிறது. அதன் ஏற்ற இறக்கம் உரிமையாளரை பாதிக்கும். ஆனால் மியூச்சுவல் பண்ட்கள் முதலீட்டாளர்கள் சார்பில் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்கின்றன. இவற்றின் பலன் பிரித்தளிக்கப்படுவது போல, பாதிப்பும் பிரிக்கப்பட்டு குறைக்கப்படுகிறது. எனவே தான், நேரடி பங்கு முதலீட்டை விட மியூச்சுவல் பண்ட் பாதுகாப்பாக அமைகிறது.
மேலாளர்கள் பொறுப்பு: மியூச்சுவல் பண்ட் சார்பில் பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யும் பொறுப்பை தொழில்முறை மேலாளர்கள் மேற்கொள்கின்றனர். வளர்ச்சி வாய்ப்பு தவிர, ரிஸ்க் அம்சங்களையும் அவர்கள் பரிசீலிக்கின்றனர். மேலும் சரிவு, பின்னடைவு ஏற்படும் போது அவற்றை ஈடு செய்வதற்கான உத்திகளையும் வகுத்து செயல்படுகின்றனர். எனவே முதலீட்டாளர்கள் மோசமான நிகழ்வுகளால் கவலைப்படாமல் இருக்கலாம்.
தீம் சார்ந்த நிதிகள்: தனிப்பங்குகளின் ஏற்ற இறக்கம் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், துறை சார்ந்த கருத்தாக்கம் கொண்ட நிதிகள் பாதிப்பை உணரலாம். உதாரணத்திற்கு அண்மைக்கால நிகழ்வுகள், வங்கித்துறை சார்ந்த கருத்தாக்கம் கொண்ட நிதிகளை பாதிக்கலாம். வங்கித் துறை பிரகாசமாக இருக்கும் போது, இந்த நிதிகள் ஈர்ப்புடையதாக அமையலாம். ஆனால், தற்போது நிலைமை மாறியிருக்கிறது. பொதுவாக குறிப்பிட்ட கருத்தாக்கம் சார்ந்த நிதிகளை தவிர்ப்பது நல்லது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|