பதிவு செய்த நாள்
26 பிப்2018
04:46
இந்திய சுற்றுலா பயணியரில் பலரும், திட்டமிட்ட பயணத்தைவிட, திடீரென மேற்கொள்ளும் பயணங்களை அதிகம் நாடுவதாக தெரிய வந்துள்ளது. தனியார் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ., லாம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், 10 நகரங்களில், 1,000 சுற்றுலா பயணியர் மத்தியில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இதில், 31 சதவீதம் பேர் திட்டமிட்ட பயணத்தை மேற்கொள்வதாக கூறினர். 53 சதவீதம் பேருக்கு மேல் முன்கூட்டியே திட்டமிடாத திடீர் பயணங்களை மேற்கொண்டதாக கூறினர்.அது மட்டுமல்லாமல், இந்தியர்கள் மத்தியில் பயணம் செய்யும் வழக்கமும் அதிகரித்துள்ளது. 54 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறையேனும் சுற்றுலா பயணம் சென்று வருவதாக தெரிவித்துள்ளனர். நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் தினசரி வாழ்க்கை நெருக்கடியில் இருந்து விடுபடுவதை சுற்றுலாவுக்கான முதன்மை நோக்கமாக கொண்டுள்ளனர். சிறிய நகரங்களில் வசிப்பவர்கள், இயற்கை சூழலை ரசிப்பதை முக்கியமாக கருதுகின்றனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|