பதிவு செய்த நாள்
08 மார்2018
00:21

ஐதராபாத்:‘‘வங்கிகள், தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு கண்டு, மீண்டும் அதிக கடன் வழங்கும் அளவிற்கு உயர வேண்டும்,’’ என, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், சி.ரங்கராஜன் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது:பல்வேறு மோசடிகளும், வாராக்கடன்களும், வங்கித் துறையை அலைக்கழிக்கின்றன. ஒட்டுமொத்த வங்கித் துறை, தற்போது, கடுமையான அழுத்தத்தில் உள்ளது. ஏற்கனவே, சில ஆண்டுகளாக இத்தகைய அழுத்தத்தை, வங்கித் துறை சந்தித்து வருகிறது.வங்கித் துறையை சீரமைக்க, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.பொதுத் துறை வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய் பங்கு மூலதனம் வழங்கும், மத்திய அரசின், மறு பங்கு மூலதன திட்டம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள், வங்கித் துறையின் செயல்பாடுகளை வலிமையாக்கும். இதன் மூலம், வங்கிகள் மீண்டும், அதிகளவில் கடன் வழங்குவதற்கான ஆற்றலை பெறும்.‘டிபாசிட்’ திரட்டுவதும், கடன் வழங்குவதும் தான், வங்கிகளின் முக்கிய பணியாகும். இந்நிலையில், மோசடி, வாராக்கடன் பிரச்னைகளில், வங்கித் துறை சிக்கி உள்ளது. நாட்டின் நலன் கருதியும், வளர்ச்சியை கருதியும், வங்கிகள் தற்போதைய பிரச்னைகளில் இருந்து, முடிந்தவரை விரைவாக வெளியே வர வேண்டும். இதையடுத்து, வங்கிகள், மீண்டும் தாராளமாக கடன் கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் வங்கிகளின் நிர்வாக இயக்குனர்கள், சந்தா கோச்சார், ஷிக்கா சர்மா ஆகியோர் உட்பட, 31 வங்கிகளின் நிர்வாக இயக்குனர்களுக்கு, தீவிர மோசடி புலனாய்வு பிரிவு, ‘நோட்டீஸ்’ அனுப்பி இருப்பது, தனியார் வங்கித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|