பதிவு செய்த நாள்
02 ஏப்2018
00:30

எஸ்.ஐ.பி., மூலம், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது, கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் பற்றி ஒரு பார்வை.
முதலீட்டின் மீது அதிக பலனைப் பெற, மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் ஏற்றதாக அமைகின்றன. மியூச்சுவல் பண்ட் வகை முதலீடு பற்றி அறிந்து, இதன் பக்கம் ஈர்க்கப்படுபவர்களுக்கு, எஸ்.ஐ.பி எனப்படும், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது. எஸ்.ஐ.பி., முறையின் மூலம், மாதாந்திர அல்லது காலாண்டு என, குறிப்பிட்ட கால அளவில், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். சமபங்கு சார்ந்த, முதலீட்டின் பலனைப் பெற உதவும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டைத் துவக்க, எஸ்.ஐ.பி., முறை ஏற்றதாக இருக்கிறது.
தொடர்ந்து, சீரான முதலீட்டை மேற்கொள்ளலாம் என்பதால், முதலீட்டு ஒழுங்கை அளிப்பதோடு, அதிக பலனைப் பெறவும் உதவுகிறது. 500 ரூபாய் எனும் குறைந்த தொகையில் கூட, முதலீட்டை துவக்கலாம் என்பதே, இத்திட்டத்தின் சாதகமான அம்சமாக அமைகிறது.
எவ்வளவு தொகை
எஸ்.ஐ.பி., மூலமான முதலீடு சிறந்த தேர்வு என்றாலும், இதில் குறைந்த தொகையை மட்டுமே முதலீடு செய்வதால், அதிக பலன் இல்லை என, நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக, ஒருவர், 15 ஆண்டுகளுக்கு முன், மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாயை, எஸ்.ஐ.பி., மூலம் முதலீடு செய்திருந்தால், இப்போது 57 லட்சம் ரூபாய் பெற வாய்ப்பு
இருக்கிறது.
வைப்பு நிதி அல்லது பி.பி.எப்., முதலீடுகளுடன் ஒப்பிடும் போது, இது கணிசமான பலனாகும். ஆனால், சமபங்குகள் தரும் நீண்ட கால முதலீட்டு அளவுகோலின் படி, பார்த்தால், இது பிரமாதமானது இல்லை என்கின்றனர். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், முதலீடு செய்யும் கால அளவு மற்றும் முதலீடு செய்யும் தொகை அளவு இரண்டுமே முக்கியம் என்பதாகும்.
எஸ்.ஐ.பி., திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்வது, அதற்கேற்ற பலனை அளிக்கும். எனவே இடைவிடாமல் முதலீட்டை தொடர்வது அவசியம். தொடர்ந்து, 15 ஆண்டுகளுக்கு எஸ்.ஐ.பி., முதலீட்டை தொடர்வது இப்போது அத்தனை பரவலாக இல்லை என்றாலும், மியூச்சுவல் பண்ட் தொடர்பான விழிப்புணர்வு, தற்போது அதிகரிக்கத் துவங்கிஉள்ள நிலையில், இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.
மேலும், முதல் முறையாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பங்கேற்பவர்கள், எஸ்.ஐ.பி.,
மூலம் குறைந்த அளவிலான தொகையைச் செலுத்தும் வழக்கம் கொண்டுள்ளனர். இதில் தவறு ஏதும் இல்லை தான். அதிலும், குறிப்பாக, மியூச்சுவல் பண்ட் முதலீட்டிற்கு முதல்
முறையாக மாறும் நிலையில், சிறிய தொகையில் துவங்கி அறிமுகம் செய்து கொள்வதும் நல்லது தான்.
நிதி இலக்கு
ஆனால், நிதி இலக்குகளுக்கு ஏற்ற பலனை பெற வேண்டும் எனில், முதலீடு செய்யும் தொகையும் அதிகமாக இருக்க வேண்டும். எஸ்.ஐ.பி., முதல் மாதம் 1,000 ரூபாய் முதலீடு செய்தால், பத்தாண்டு களுக்கு பின், அது அளிக்கும் பலன் கணிசமாக இருக்கலாம்.
ஆனால் அதன் மூலமான மொத்த பலன், ஒருவரின் நிதி நிலையில், பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் மாதந்தோறும் அதிக தொகையை முதலீடு செய்து இருந்தால், மொத்த பலன் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
சிறிய தொகையில் துவங்கினாலும், அதே தொகையை தொடராமல், வருமானத்திற்
கு ஏற்ப, அந்த தொகையை தொடர்ந்து உயர்த்திக்கொண்டு வருவது, நல்ல உத்தியாக அமையும். நீண்ட கால நோக்கில் தொகையும் அதிகரித்து, முதலீடு தரும் பலனும் அதிகமாக இருக்கும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|