பதிவு செய்த நாள்
20 ஏப்2018
01:41

புதுடில்லி : கடந்த நிதியாண்டில், பயணியர் கார் பிரிவில், அதிகம் விற்பனையான கார்களின், ‘டாப் – 10’ பட்டியலில், ‘மாருதி சுசூகி இந்தியா’ நிறுவனத்தைச் சேர்ந்த, ஏழு கார்கள் இடம் பெற்றுள்ளன.
இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான, ‘சியாம்’ வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த, ‘ஆல்டோ’ கார் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும், இந்த பட்டியலில், ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனத்தைச் சேர்ந்த, மூன்று கார்கள் இடம் பெற்றுள்ளன.‘மாருதி வேகன் ஆர்’ கார் விற்பனை, 1.72 லட்சத்தில் இருந்து, 1.69 லட்சமாகக் குறைந்து, ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இது, 2016 – 17ம் நிதியாண்டுக்கான பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘டாப் – 10’ பட்டியல்
நிறுவனம் - கார் - 2017 –18 விற்பனை - 2016 – 17 விற்பனை
மாருதி ஆல்டோ 2,58,539 2,41,635 டிசையர் 1,96,990 1,67,266 பலேனோ 1,90,480 1,20,804 சுவிப்ட் 1,75,928 1,66,885 வேகன் ஆர் 1,68,644 1,72,346
ஹூண்டாய் கிராண்டு ஐ – 10 1,51,113 1,46,228
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 1,48,462 1,08,640
ஹூண்டாய் எலைட் ஐ – 20 1,36,182 1,26,304
ஹூண்டாய் கிெரட்டா – 1,07,136மாருதி செலிரியோ 94,721 97,361
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|