பதிவு செய்த நாள்
26 ஏப்2018
03:10
சென்னை : காய்கறி, பழ வகைகள் விலை நேற்று முன்தினம் இருந்த நிலையில், பருப்பு, சர்க்கரை ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் காய்கறி, மலர், பழ வகைகள் நேற்றைய விலையிலேயே விற்பனையாகின. கொத்தவால்சாவடி உணவு தானிய விற்பனை சந்தையில், துவரம் பருப்பு, சர்க்கரை விலை குறைந்து காணப்பட்டது. சர்க்கரை மொத்த விலையில், 50 கிலோ, 1,520 ரூபாயாக உள்ளது. தற்போது சர்க்கரை, 1 கிலோ, மொத்த விலையில், 30.50 ரூபாயாக உள்ளது. கடந்த வாரம், 31.80 ரூபாயாக இருந்தது.
அதே போல், துவரம் பருப்பு, 1 கிலோ, கடந்த வாரம், 67 – 69 ரூபாயாக இருந்தது; தற்போது, 65 – 66 ரூபாயாக உள்ளது. பாசிப்பயறு குறைந்த அளவு ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது.தற்போது, 1 கிலோ, 70 – 73 ரூபாயாக உள்ளது. உளுந்தம் பருப்பு, 1 கிலோ, 67 ரூபாயாக உள்ளது.செக்கு எண்ணெய்க்கான நிலக்கடலை, 1 கிலோ, 55 – 70 ரூபாயாக உள்ளது. மொத்த விலையில், 80 கிலோ நிலக்கடலை அதிகபட்சமாக, 4,300 ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|