பதிவு செய்த நாள்
29 ஏப்2018
01:48

மும்பை: கடந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், நாட்டின் நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி, 8.67 சதவீதம் சரிவடைந்து, 2,64,131 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. இது, 2016- – 17ம் நிதியாண்டில், 2,89,207 கோடி ரூபாயாக இருந்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், இந்தாண்டு ஜனவரி முதல், தங்க ஆபரணங்களுக்கு, 5 சதவீத மதிப்பு கூட்டு வரி வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த நிதியாண்டில், இந்நாடுகளுக்கான, இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 27 சதவீதம் குறைந்து, 91,458 கோடி ரூபாயில் இருந்து, 66,863 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.அதே சமயம், மதிப்பீட்டு நிதியாண்டில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டிய வைரங்கள் ஏற்றுமதி மதிப்பு, 0.18 சதவீதம் உயர்ந்து, 1,52,682 கோடி ரூபாயில் இருந்து, 1,52,961 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அளவின் அடிப்படையில், ஏற்றுமதி, 322 காரட்டில் இருந்து, 349 காரட்டாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 6.71 சதவீதம் உயர்ந்து, 58,465 கோடி ரூபாயில் இருந்து, 62,387 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.ஆனால், வெள்ளி ஆபர ணங்கள் ஏற்றுமதி, 18.91 சதவீதம் குறைந்து, 26,923 கோடி ரூபாயில் இருந்து, 21,831 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
புதிய சந்தைகள் : அமெரிக்காவின் ஆபரணங்கள் இறக்குமதியில், இந்தியாவின் பங்களிப்பு, 16 சதவீதமாக உள்ளது. இத்துடன், ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளிலும், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க முயன்று வருகிறோம். அதுமட்டுமின்றி, ஈரான், ஜோர்டான், துருக்கி, லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா போன்ற புதியசந்தைகளிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் வலுவாக காலுான்ற நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
காலின் ஷா, தலைவர், நவரத்தினங்கள் – ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாடு கூட்டமைப்பு
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|