பதிவு செய்த நாள்
05 மே2018
01:00

நியூயார்க்:‘உலகில், அடுத்த, 10 ஆண்டுகளில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை காணும் நாடுகளில், இந்தியா முதலிடம் பிடிக்கும்’ என, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையின், சர்வதேச மேம்பாட்டு மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இந்தியா, வியட்நாம் போன்ற நாடுகள், ஏற்றுமதியை பரவலாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.புதிய ரசாயனங்கள், வாகனங்கள், சில வகை மின்னணு சாதனங்கள் போன்ற, நுண்ணிய தொழில்நுட்பங்கள் சார்ந்த துறைகளை அதிக அளவில் ஏற்றுமதியில் இணைத்து, விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.
இதன் காரணமாக, அடுத்த, 10 ஆண்டுகளில் இந்தியா, ஆண்டுக்கு, 7.9 சதவீத பொருளாதார வளர்ச்சியுடன், உலகளவில் முதலிடத்தை பிடிக்கும். சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவை முறையே, 4.9 சதவீதம், 3 சதவீதம் மற்றும், 3.5 சதவீதம் வளர்ச்சி காணும்.
இந்தியாவின் உற்பத்தி திறன், அந்நாடு தற்போது ஈட்டும் வருவாயை விட, எதிர்பார்த்ததற்கும் மேலாக உள்ளது. அதன் அடிப்படையில் தான், இந்தியா வேகமாக பொருளாதார வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, அதன் தற்போதைய திறனை வைத்து, ஏற்றுமதியை விரிவுபடுத்தி வருகிறது. அத்துடன், அத்திறன் சார்ந்த பொருட்களின் உருவாக்கத்திலும் கவனம் செலுத்துகிறது.இதன் மூலம், அப்பொருட்கள் வாயிலான ஏற்றுமதியையும் விரிவுபடுத்த முடியும். எனினும், உயர் மதிப்புள்ள துறைகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை, இந்தியா முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளது.
அவற்றில் கவனம் செலுத்தினால், உற்பத்தி வளர்ச்சி மேலும் உயரும்; அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவும் முன்னேறுகிறது
வரும், 2026ல், வேகமான பொருளாதார வளர்ச்சியில், ஆப்ரிக்காவின் உகாண்டா, இரண்டாவது இடத்தை பிடிக்கும். டான்சானியாவுக்கு, நான்காவது இடமும், கென்யாவுக்கு, 10வது இடமும் கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|