பதிவு செய்த நாள்
07 மே2018
00:33
ரியல் எஸ்டேட் தொடர்பான ஆர்வம் இரண்டாம் அடுக்கு நகரங்களில் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஆமதாபாத், பாட்னா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் ரியல் எஸ்டேட் தொடர் பான தகவல்களை இணையத்தில் தேடுவது அதிகரித்துள்ளது.
இணையத்தில் ரியல் எஸ்டேட் சேவை வழங்கி வரும் மக்கான் டாட் காம் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதில், இரண்டாம் அடுக்கைச்சேர்ந்தவையாக கருதப்படும் சூரத், லக்னோ, பாட்னா, இந்துார், விசாகப்பட்டினம், ஆமதாபாத், 25 நகரங்களில் ரியல் எஸ்டேட் தொடர்பான தேடல் சராசரியாக 173 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ரியல் எஸ்டேட் தேடல், 489 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|