ஊதிய உயர்­வுக்­காக பணி மாற்றம்ஊதிய உயர்­வுக்­காக பணி மாற்றம் ...  பங்குச்சந்தை  சந்தை மதிப்பை உணர்ந்த வால்­மார்ட் பங்குச்சந்தை சந்தை மதிப்பை உணர்ந்த வால்­மார்ட் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு முத­லீடு ஒரு நெடுங்­கால பய­ணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2018
00:31

பங்­குச் சந்தை நோக்­கிச் செல்­லும் சேமிப்­பு­க­ளின் வேகம் சற்­றும் குறை­ய­வில்லை. வைப்பு கணக்­கில் மக்­கள் நம்­பிக்கை இழந்த சூழல் உரு­வாகி உள்­ளது. இந்த சூழல், முத­லீட்­டா­ளர் நடத்­தையை மாற்றி வரு­வது மறுக்க முடி­யா­தது. கடந்த ஓராண்­டாக, பலர் தங்­கள் சேமிப்­பு­கள் முழு­வ­தை­யும் மாற்றி அமைப்­ப­தில் தீவி­ரம் காட்­டு­கின்­ற­னர். பங்­குச் சந்தை பக்­கமே வரா­த­வர்­கள்­கூட மனம் மாறி சிந்­திக்­கும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது.
புதிய முத­லீட்­டா­ளர்­கள் பங்­குச் சந்­தைக்கு தொடர்ந்து வருகை புரி­யும் இத்­த­ரு­ணத்­தில், யாருக்கு என்ன பொறுப்பு? துறை­சார் நெறி­க­ளின் முக்­கி­யத்­து­வம் என்ன? வருங்­கா­லத்­தில் முத­லீட்­டா­ள­ரின் நம்­பிக்­கையை தொடர்ந்து தக்­க­வைத்­துக்­கொள்ள அனைத்து தரப்­பும் என்ன செய்ய வேண்­டும்? இந்த கேள்­வி­கள் மிக முக்­கி­ய­மா­னவை.
முத­லீட்­டா­ளர்­கள் ஒரு விஷ­யத்தை தெளி­வாக புரிந்­து­கொள்­வது அவ­சி­யம். முத­லீட்டு முடி­வு­க­ளின் பொறுப்பு மிக தெளி­வாக நெறிப்­ப­டுத்­தப்­பட வேண்­டும். அந்த பொறுப்பு முத­லீட்­டா­ளரை மட்­டுமே சார்ந்­தது. அதை இன்­னொ­ருத்­த­ருக்கு தரு­வ­தாக இருந்­தால், அதற்கு முன் சில அடிப்­படை விஷ­யங்­களை தெளி­வாக உணர வேண்­டும்.
முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்க, ‘செபி’ தெளி­வான அங்­கீ­கா­ரம் கொடுத்து உள்­ளது. அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டோரை அணுகி ஆலோ­சனை பெற­லாம். அப்­படி பெறும்­போ­தும், முத­லீட்டு முடி­வின் பொறுப்பு முத­லீட்­டா­ள­ரையே சாரும். ஆலோ­ச­னையை தெளி­வாக விளக்­கும் பொறுப்பு மட்­டுமே ஆலோ­ச­கரை சேரும்.
அமைப்­பு­சாரா முறை­யில் ஆலோ­சனை கொடுப்­பது சட்ட விரோ­தம். அப்­படி மீறி பெறும் ஆலோ­சனை பொறுப்­பும்­கூட முத­லீட்­டா­ள­ரையே சேரும். இதை தெளி­வாக உணர வேண்­டும்.கொடுக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­யின் மீது முடி­வெ­டுப்­பது முத­லீட்­டா­ள­ரின் கடமை. பரஸ்­பர நிதி வர்த்­த­க­மும் அமைப்பு சார்ந்­தது. வர்த்­த­கர்­கள் விற்­பனை செய்ய மட்­டுமே அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­வர்­கள். அவர்­கள் செய்­யும் விற்­ப­னைக்கு சார்­பான, உகந்த ஆலோ­ச­னை­களை கொடுக்­க­லாம். ஆனால், அவற்­றின் மீது எடுக்­கும்
முடி­வு­க­ளின் பொறுப்பு முத­லீட்­டா­ள­ரையே சேரும்.பங்கு வர்த்­த­கர்­கள் ஆலோ­சனை வழங்­கி­னால், அதன் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­படும் முடி­வு­க­ளுக்கு முத­லீட்­டா­ளர் மட்­டுமே பொறுப்பு. இதைக்­கூட உண­ரா­மல், பல­ரின் ஆலோ­ச­னை­யில் தின வர்த்­த­கம் செய்­வதை முற்­றி­லும் தவிர்க்க வேண்­டும்.
பங்கு தர­கர்­கள் அமர்த்­தி­யுள்ள டீலர்­கள், முத­லீட்டு ஆலோ­ச­கர்­கள் அல்ல. அவர்­கள் டீலிங் மட்­டுமே செய்ய அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­வர்­கள். நீங்­கள் சொல்­வதை நிறை­வேற்­று­வதே அவர்­கள் பொறுப்பு. முடி­வெ­டுக்­கும் பொறுப்­பும், ஆலோ­ச­னை­களை வழங்­கும் பொறுப்­பும் அவர்­களை சாராது.
சந்­தை­யில் நடக்­கும் பெரு­வா­ரி­யான இழப்­பு­கள், இந்த அடிப்­படை புரி­தலை அனைத்து தரப்­பி­ன­ரும் மதிக்­கா­த­தால் தொடர்ந்து நடக்­கின்­றன.முத­லீ­டு­களை பங்­குச் சந்­தை­யில் தொடர்ந்து செய்­வ­தில் தவ­றில்லை. ஆனால், அவற்றை நல்ல வரை­மு­றை­க­ளுக்­குள் கட்­டுப்­ப­டுத்தி செய்­வது மிக அவ­சி­யம். முடி­வெ­டுக்­கும் பொறுப்பை முத­லீட்­டா­ளர்­கள் ஏற்க வேண்­டும். அந்த பொறுப்பை சிறக்­கச் செய்ய ஆவன செய்ய வேண்­டும். ஆலோ­ச­னை­களை உரிய அங்­கீ­கா­ரம் பெற்­ற­வர்­க­ளி­டம் பெற­லாம். பெற்ற ஆலோ­ச­னையை பரி­சீ­லித்து, நன்கு யோசித்து முடி­வெ­டுக்­கும் திறனை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும்.
அவ­சர ஆலோ­சனை பெற்று, அவ­சர முடி­வெ­டுக்­கும் போக்கை அறவே கைவிட வேண்­டும். பங்கு முத­லீடு ஒரு நெடுங்­கால பய­ணம். அந்த பய­ணம் இனிதே நடக்க, அனைத்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுப்­பது ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரின் கடமை.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)