ஊதிய உயர்­வுக்­காக பணி மாற்றம்ஊதிய உயர்­வுக்­காக பணி மாற்றம் ... ரூ.100ஐ தொட்ட பட்­டாணி ரூ.100ஐ தொட்ட பட்­டாணி ...
பங்குச்சந்தை சந்தை மதிப்பை உணர்ந்த வால்­மார்ட்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2018
00:35

உல­கின் மிகப்­பெ­ரிய சில்­லரை வர்த்­தக நிறு­வ­ன­மான வால்­மார்ட், இந்­திய மின்­னணு வர்த்­தக நிறு­வ­ன­மான பிளிப்­கார்ட்­டின், 77 சத­வீத பங்­கு­களை வாங்­கப் போகிறது என்ற செய்தி வெளி­யா­ன­வு­டனே, எண்­ணற்ற ஹேஷ்­யங்­கள், எதிர்­பார்ப்­பு­கள், எதிர்ப்­பு­கள் எழுந்­துள்­ளன. இதை எப்­ப­டி புரிந்­து­கொள்­வது? வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இத­னால் என்ன பலன்?
முத­லில் இந்­தச் செய்தி மிகுந்த பிர­மிப்­பை­யும், நம்­பிக்­கை­யை­யும், இளம் தொழில் துறை­யி­னர் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 11 ஆண்­டு­க­ளுக்கு முன் துவங்­கப்­பட்ட இளைய தலை­முறை நிறு­வ­னம் பிளிப்­கார்ட். அதன் வளர்ச்சி அபா­ர­மா­னது. இந்­தி­யா­வில் இணை­ய­மும், அலை­பே­சி­களும் தொழில்­நுட்­ப­மும் வளர்ந்த வேகத்தை ஒட்டி வளர்ந்த புதுமை இணைய சேவை இது.
இந்த நிறு­வ­னத்தை, சர்­வ­தேச மெகா நிறு­வ­ன­மான வால்­மார்ட் ஒரு பொருட்­டாக கருதி, 16 மில்­லி­யன் டாலர் அதா­வது இந்­திய மதிப்­பில், 1 லட்­சத்து, 12 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு செய்ய முன்­வந்­தி­ருப்­பது அரிய விஷ­யம்.இந்­தி­யா­வைச் சேர்ந்த இளைய தலை­முறை தொழில் துறை­யி­ன­ருக்­குக் கிடைத்­துள்ள உலக அங்­கீ­கா­ர­மா­கவே இந்த ஒப்­பந்­தம் பார்க்­கப்­ப­டு­கிறது.இதற்கு வேறு சில அர்த்­தங்­களும் உண்டு. இந்­திய மின்­னணு வர்த்­தக சந்தை முதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளது; இணைய சேவை­க­ளின் தரம் உயர்ந்­துள்­ளது; இந்­திய வாடிக்­கை­யா­ளர்­கள் இணை­யத்­தில் பொருட்­களை வாங்­கு­வ­தில்,தொடர்ச்­சி­யாக ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர்.
இந்­திய உற்­பத்­தி­யா­ளர்­களும் மேன்­மே­லும் இணைய வர்த்­த­கத்­தில் கவ­னம் செலுத்­து­கின்­ற­னர்; தர­மான பொருட்­கள், உரிய நேரத்­தில் கொண்டு சேர்க்­கப்­ப­டு­கிறது; அதன் வாயிலாக, வாடிக்­கை­யா­ளர்­க­ளின் நம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது என்­றெல்­லாம் இதற்கு அர்த்­தம் கற்­பித்­துக் கொள்­ள­லாம்.
இது உண்­மை­யும் கூட. அர­சும், தனி­ந­பர்­களும் படிப்­ப­டி­யாக பல­மு­னை­களில் செய்­து­வ­ரும் முயற்­சி­க­ளுக்கு கிடைத்­துள்ள சர்­வ­தேச கவ­ன­மா­க­வும், அங்­கீ­கா­ர­மா­க­வும் இதைக் கரு­து­வ­தில் தவ­றில்லை. சரி, தைரி­ய­மாக கொஞ்­சம் கால­ரைத் துாக்கி­விட்­டுக்­கொள்­ளுங்­கள்! பெரு­மி­தப்­ப­ட­லாம்.
பயன் என்ன?
வால்­மார்ட், பிளிப்­கார்ட் இடையே ஏற்­பட்­டுள்ள ஒப்­பந்­தத்­தால், வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு என்ன பயன்?
வால்­மார்ட்­டுக்கு ­சில திற­மை­கள் உண்டு. முக்­கி­ய­மாக, அது உலக அள­வில் உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­டமே நேர­டியா­கக் கொள்­மு­தல் செய்து, அதைத் தங்­கள் கடை­கள் வாயிலாக, சந்தை விலையை விடக் குறைந்த விலை­யில் விற்று வரு­கிறது. தங்­க­ளுக்கு என பிரத்­யேக பிராண்­டு­களை உரு­வாக்­கி­யி­ருப்­ப­தோடு, தரத்தை உறு­திப்­ப­டுத்­தி­யும் வரு­கிறது.
தர­மான பொருட்­கள், மலி­வான விலை­யில் கிடைப்­ப­தற்­கான எல்லா சாத்­தி­யங்­களும் உண்டு. அது­வும், சீன தயா­ரிப்­பு­கள் இங்கே பெரு­ம­ளவு வந்­தி­றங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம்.வால்­மார்ட்­டின் பலங்­களில் ஒன்று, வீட்­டுக்­குத் தேவை­யான அரிசி, பருப்பு, பல­ச­ரக்­குப் பொருட்­களை விற்­பனை செய்­வது.
பிளிப்­கார்ட் இந்த விஷ­யத்­தில் சற்றே கோட்டை விட்­டு­விட்­டது. இரு­வ­ரும் கைகோர்க்­கும்­போது, இந்­தியசந்­தை­யில் பல­ச­ரக்­குப் பொருட்­க­ளை­யும், இணைய வழி­யில் கொண்டு சேர்க்­கும் வர்த்­தக முறையை அறி­மு­கப்­ப­டுத்த முடி­யும்.இத­னால், பெரும்­பா­லான பொருட்­களை நேர­டி­யாக இணை­யத்­தில் ஆர்­டர் செய்து வீட்­டுக்கே வர­வ­ழைத்து விட­லாம்.
இதை­யெல்­லாம் செய்ய வேண்­டும் என்­றால், வால்­மார்ட் நேர­டி­யாக உற்­பத்­தி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்தே பொருட்­களை வாங்­கத் துவங்­கும். இத­னால், இந்­திய விவ­சா­யிக­ளுக்கு இடைத்­த­ர­கர்­கள் தொல்­லை­யில்­லா­மல், சந்­தை­யோடு நேர­டித் தொடர்பு கிடைக்­கும்.
விற்­பனை அதி­க­ரிக்க அதி­க­ரிக்க, உற்­பத்­தியை உயர்த்­தும் நடை­மு­றை­களும் இங்கே அமல்­செய்­யப்­பட வேண்­டி­ இருக்­கும்.அதே­போல், வால்­மார்ட்­டின் இன்­னொரு திறமை, பொருட்­களை கடைசி வாடிக்­கை­யா­ள­ருக்­கும் கொண்டுசேர்க்­கும் வலிமை. இந்­தத் திறனை அந்­நி­று­வ­னம் இந்­தி­யா­வில் கள­மி­றக்­கும். அது­வும், மிக­வும் வேக­மாக.வால்­மார்ட்­டில் இருக்­கும் இன்­னொரு தொழில்­நுட்­பம், ‘ஆம்­னி­சே­னல்’ என்­பது. அதா­வது, நீங்­கள் எந்­தக் கரு­வி­யி­லி­ருந்­தும் தேவைப்­படும் சரக்­குகளை ஆர்­டர் செய்­ய­லாம். அதை, அவர்­க­ளு­டைய எந்­தக் கடை­களிலும் போய் பெற்­றுக்கொள்­ள­லாம் அல்­லது வீட்­டுக்­கும் வர­வ­ழைக்­க­லாம்.வருங்­கா­லத்­தில் எண்­ணற்ற கடை­களை இணைக்­கும்­போது, இந்­தச் சேவையை வால்­மார்ட் அறி­மு­கப்­ப­டுத்­தும்.
தொழில்­நுட்­பம் இந்­தச் சேவை­க­ளின் அடிப்­ப­டை­யாக இருக்­கப் போகிறது. இப்­போது நீங்­கள் ஒரு பொரு­ளைத் தேர்வு செய்து ஆர்­டர் செய்ய வேண்­டும். வருங்­கா­லத்­தில் குரல்­வழி உத்­த­ர­வு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும் வசதி வரும். கூகுள் அல்­லது மைக்­ரோ­ சாப்ட்­டு­டன் இணைந்து இந்­தச் சேவையை வால்­மார்ட் வழங்­க­லாம்.
வாடிக்­கை­யா­ளரே ராஜா
வால்­மார்ட் இங்கே வரு­வ­தற்­கான முக்­கிய கார­ணம், ஏற்­க­னவே இங்கே அமே­சான் கால் பதித்­து­விட்­டது என்­பது தான்.இந்­தி­ய சந்­தையை தாம் கோட்­டை­விட்டு விடு­வோமோ என்ற எண்­ணத்­தில் தான், இவ்­வ­ளவு பெரிய தொகை கொடுத்து, பிளிப்­கார்ட் நிறு­வ­னத்­தைக் கைய­கப்­ப­டுத்த முனைந்­துள்­ளது.அத­னால், வருங்­கா­லத்­தில் அமே­சான், வால்­மார்ட் இடை­யே­யான போட்டி கடு­மை­யாக இருக்­கும். இத­னால், பய­ன­டை­யப் போகி­ற­வர்­கள் வாடிக்­கை­யா­ளர்­கள். அவர்­க­ளைத் தக்­க­வைத்­துக் கொள்­வ­தற்­கும், மீண்­டும் மீண்­டும் ஷாப்­பிங் செய்­வ­தற்­கும் துாண்டும் விதத்­தில் எண்­ணற்ற சலு­கை­க­ளை­யும், வச­தி­க­ளை­யும் செய்து தர இவ்­விரு நிறு­வ­னங்­க­ளுமே தயங்­கப் போவ­தில்லை.
இவர்­க­ளோடு போட்டி போட­வேண்­டு­மெ­னில், சில்­லரை வர்த்­த­கத்­தில் ஏற்­க­னவே ஈடு­பட்டு இருக்­கும் ரிலை­யன்ஸ், டாடா குழு­மம், பியூச்­சர் குழு­மம் போன்­ற­வை­யும், தங்­கள் பொருட்­க­ளின் விலை­க­ளைக் குறைப்­ப­தோடு, சேவை­யின் தரத்­தை­யும் உயர்த்­திக்­கொள்ள வேண்­டும்.எது­வாக இருந்­தா­லும், இறுதி பலன் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குத் தான்.
சிறு, குறு வணி­கர்­கள் காணா­மல் போய்­வி­டு­வர் என்ற அச்­சம் தேவை இல்லை. இந்­தி­யா­வில் உள்ள, 40 கோடி மத்­தி­ய­மர்­களை குறி­வைத்து தான் இத்­த­கைய நிறு­வ­னங்­கள் வரு­கின்­றன. இவர்­க­ளால் அண்­டவே முடி­யாத சந்தை வெளியே இருக்­கிறது. அதற்கு சிறு, குறு வணி­கர்­க­ளின் சேவை எப்­போ­தும் தேவை.தொழில் துறை­யி­ன­ருக்கு இந்த ஒப்­பந்­தம் ஒரு செய்­தி­யைச் சொல்­கிறது. இந்­திய சந்தை எத்­த­கைய புதிய சேவை­யை­யும் ஏற்­றுக்­கொள்­ளத் தயா­ராக இருக்­கிறது.
இத்­தனை ஆண்­டு­க­ளாக புது­மை­கள் போது­மான அளவு இல்லை. போதிய பலத்­தோடு புது­மை­க­ளை­யும் புகுத்­தும் நிறு­வ­னங்­கள் வரு­மே­யா­னால், அதற்­கான வாய்ப்பு இங்கே கொட்­டிக் கிடக்­கிறது என்­பது தான் செய்தி. சந்­தைக்­கேற்ப தங்­க­ளைத் தகு­திப்­ப­டுத்­திக் கொள்­வது தொழில் துறை­யி­ன­ருக்கு நல்­லது.
வாய்ப்­பு­க­ளின் வாசல்
அர­சுக்­குத் தான் இது முக்­கி­ய­மான செய்­தியை சொல்­கிறது. அந்­நிய முத­லீட்­டா­ளர்­கள் இந்­தி­யச் சந்­தையை எவ்­வ­ளவு பெரிய வாய்ப்­பாக பார்க்­கின்­ற­னர் என்­பது தெளிவு. உள்ளே வரு­கி­ற­வர்­களை நெறிப்­ப­டுத்தி, முறைப்­ப­டுத்தி, இந்­திய உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு சிக்­கல் வரா­மல், அதே­ச­ம­யம் இங்கே விரிந்­து­கி­டக்­கும் வாய்ப்­பு­களை முழு­மை­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்ள அனு­ம­திக்க வேண்­டும்.சில்­லரை வர்த்­த­கம் என்­பது பொன் முட்­டை­யி­டும் வாத்து. அதை, நம்மை விட, வெளி­நாட்­டி­னர் நன்கு உணர்ந்து கொண்­டுள்­ள­னர். வால்­மார்ட் ஒப்­பந்­தம் அதைத்­தான் சொல்­கிறது.
ஆர்.வெங்­க­டேஷ், பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)