‘இ – வே’ பில் பெறுவதிலிருந்து விலக்கு 100 பொருட்களுக்கு தமி­ழக அரசு சலுகை‘இ – வே’ பில் பெறுவதிலிருந்து விலக்கு 100 பொருட்களுக்கு தமி­ழக அரசு சலுகை ... தனியார் இன்டர்நெட் மையத்தில்  இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை தனியார் இன்டர்நெட் மையத்தில் இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தயாரிப்பு துறை வளர்ச்சியில் தொய்வு ரிசர்வ் வங்கி, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்த வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2018
00:28

புதுடில்லி:கடந்த மே மாதம், தயா­ரிப்பு துறை­யின் வளர்ச்சி வேகத்­தில் தொய்வு ஏற்­பட்­டி­ருப்­பது, ஆய்­வொன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.
நாட்­டின் தயா­ரிப்பு துறை குறித்து, நிக்கி – மார்க்­கிட் நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்கை:கடந்த மே மாதம், தயா­ரிப்பு துறை நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய, ‘ஆர்­டர்’கள் வரு­வது குறைந்­துள்­ளன. இதன் கார­ண­மாக, தயா­ரிப்பு துறை­யின் உற்­பத்­தி­யும் குறை­வா­கவே இருந்­தது; வேலை­வாய்ப்­பு­களும், புதிய வியா­பா­ரங்­களும் குறைந்­துள்­ளன. இது போன்ற கார­ணங்­க­ளால், ஒட்­டு­மொத்த தயா­ரிப்பு துறை­யின் வளர்ச்சி, மித­மா­கவே இருந்­தது.
அத­னால், மே மாதம், தயா­ரிப்பு துறை வளர்ச்­சியை குறிக்­கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறி­யீடு, 51.2 புள்­ளி­யாக குறைந்­துள்­ளது. இது, ஏப்ரலில், 51.6 புள்­ளி­யாக இருந்­தது.இக்­கு­றி­யீடு, 50 புள்­ளி­ களை தாண்­டி­னால், அது வளர்ச்­சியை குறிக்­கும். இதன்­படி, தயா­ரிப்பு துறை, தொடர்ந்து, 10 மாதங்­க­ளாக வளர்ச்சி கண்டு வரு­கிறது.
கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், பிப்­ர­வரி முதல், தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளின் மூலப்­பொ­ருட்­கள் செல­வி­னம் அதி­க­ரித்­துள்­ளது; அதற்­கேற்ப, தயா­ரிப்பு பொருட்­க­ளின் விலை­யும் உயர்ந்­துள்­ளன.நம் நாடு, கச்சா எண்­ணெய் தேவை­யில், 80 சத­வீ­தத்தை இறக்­கு­மதி மூலம் பூர்த்தி செய்து கொள்­கிறது.
இந்­நி­லை­யில், கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், நாட்­டின் இறக்­கு­மதி செல­வி­னம் அதி­க­ரிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்­பும் குறைந்­துள்­ளது. கச்சா எண்­ணெய் விலை மேலும் அதி­க­ரித்­தால், ரூபாய் மதிப்பு மேலும் சரி­வ­டைந்து, நாட்­டின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை அதி­க­ரிக்­கும் என, அஞ்­சப்­ப­டு­கிறது.
மேலும், மூலப்­பொ­ருட்­கள், உற்­பத்தி பொருட்­கள் ஆகி­ய­வற்­றின் விலை உயர்­வால், நாட்­டின் பண­வீக்­க­மும் அதி­க­ரிக்­கும் என­லாம்.எனவே, பண­வீக்­கத்தை கட்­டுக்­குள் வைக்­க­வும், நிதிப் புழக்­கத்தை ஸ்தி­ரப்­ப­டுத்­த­வும், ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்­டியை உயர்த்­தக் கூடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
ரிசர்வ் வங்கி, நடப்பு 2018- – 19ம் நிதி­யாண்­டின், முதல் நிதிக் கொள்­கையை, ஏப்­ர­லில் வெளி­யிட்­டது. அதில், ரெப்போ வட்டி மாற்­ற­மின்றி, 6 சத­வீ­த­மா­கவே தொட­ரும் என, தெரி­விக்­கப்­பட்­டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், தொடர்ந்து நான்­கா­வது முறை­யாக ரெப்போ வட்­டி­யில், ரிசர்வ் வங்கி மாற்­றம் ஏதும் செய்­ய­வில்லை.
இந்­நி­லை­யில், வரும், 6ம் தேதி ரிசர்வ் வங்கி வெளி­யி­ட­வுள்ள நிதிக் கொள்­கை­யில், ரெப்போ வட்டி உயர்த்­தப்­ப­ட­லாம் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
நிதி பற்றாக்குறை மறுமதிப்பீடு
நாட்­டின் நிதிப் பற்­றாக்­குறை, 2017 – 18ம் நிதி­யாண்­டில், 3.53 சத­வீ­த­மாக மறு­ம­திப்­பீடு செய்­யப்­பட்டு உள்­ள­தாக, மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது. கடந்த நிதி­யாண்­டில், நிதிப் பற்­றாக்­குறை இலக்கு, 3.2 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது. இது, பிப்­ர­வ­ரி­யில், 3.5 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டது. இந்த வகை­யில், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், நிதிப் பற்­றாக்­குறை, 5.90 லட்­சம் கோடி ரூபா­யாக உள்­ளது.நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டில், நிதிப் பற்றாக்­கு­றையை, 3.3 சத­வீ­த­மாக குறைக்க, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)