பதிவு செய்த நாள்
04 ஜூன்2018
01:30
வீட்டுக்கடன் பெறுவது போலவே இன்று வாகனக் கடன் பெறுவதும் பரவலாகி இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சொந்த கார் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம். புதிய கார் அல்லது பயன்படுத்திய கார் வாங்க வங்கிகள் கடன் அளிக்கின்றன. கார் கடன் பெறுவதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை:
கடன் தகுதி
கார் வாங்குவதற்கான கடனுக்கான தகுதி, கடனுக்கு விண்ணப்பிப்பவரின் வருமானம் மற்றும் காரின் விலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்து, உபரி வருமானம் அதிகம் இருந்தால் அதிக அளவில் கடன் கிடைக்கும். முகவரி சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.
வட்டி விகிதம்
வீட்டுக்கடன் போலவே கடனுக்கான வட்டி விகிதம் முக்கியம். நிலையான மற்றும் மாறும் வட்டி விகிதம் உண்டு. பழைய கார்களை வாங்குவதற்கான கடனை விட புதிய காரை வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் குறைவு. வட்டி விகிதம் குறையக்கூடிய சூழலில் மாறும்வட்டி விகிதத்தை தேர்வு செய்யலாம்.கடனுக்கான காலம் அதிகபட்சம் 7 ஆண்டுகள்.
செயல்முறை கட்டணம்
மற்ற கடன்கள் போலவே கார் கடனுக்கும் செயல்முறை கட்டணங்கள் போன்றவை பொருந்தும். முன்கூட்டியே செலுத்தும் கட்டணம், முன்னதாகவே கடனை அடைப்பதற்கு கட்டணம் இருக்கலாம். இந்த கட்டணங்களை ஒப்பிட்ட பிறகே வங்கியை தேர்வு செய்வது நல்லது.
கார் காப்பீடு
கார் மற்றும் இரு சக்கர வாகனம் வாங்குபவர்கள் மூன்றாம் நபர் காப்பீடு பெறுவது கட்டாயம். கார் டீலரிடம் காப்பீடு தொடர்பான வாய்ப்புகளை கேட்டு தெரிந்து கொண்டு சிறந்ததை தேர்வு செய்யலாம். பூஜ்ஜியம் தேய்மானம் பாலிசி பெறுவதும் எதிர்காலத்தில் உதவும். விரிவானகாப்பீடு பாலிசிகளை பரிசீலனை செய்வதும் பயனுள்ளதாக இருக்கும்.
பிற செலவுகள்
வாகனங்கள் பொதுவாக ஷோரூம் விலை அடிப்படையில் குறிப்பிடப்படுகின்றன. எனவே துணைப்பொருட்கள் போன்றவற்றுக்கு கூடுதல் தொகை இருக்கலாம். சாலை வரியும் உண்டு. வரி மற்றும் காப்பீடு வாடிக்கையாளர்கள் பொறுப்பு. கடன் காலத்தில் வாகனம், வங்கி சார்பில் அடமான மாக கொள்ளப்படும். கடனை அடைத்த பிறகு இதை நீக்கிக் கொள்ளலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|