தனியார் இன்டர்நெட் மையத்தில்  இம்மாத இறுதியில் அரசு இ- – சேவைதனியார் இன்டர்நெட் மையத்தில் இம்மாத இறுதியில் அரசு இ- – சேவை ... சந்தை நிலவரம் சந்தை நிலவரம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை வளர்ச்­சியை சொல்­கி­றதா ஜி.டி.பி.?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
02:05

கடந்த, 2017- – -18ம் நிதி­யாண்­டின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்­பீ­டு­கள் வெளி­யா­கி­யுள்­ளன. ஒரு பக்­கம் மகிழ்ச்­சி­யை­யும், மறு பக்­கம் எதிர்­பார்ப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்ள, ஜி.டி.பி., மதிப்­பீ­டு­களை எப்­படி புரிந்­து­கொள்ள வேண்­டும்?
இந்­தி­யா­வின் மொத்த வளர்ச்­சி­யைக் குறிப்­பது, ஜி.டி.பி., எனப்­படும், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி. உண்­மை­யான வளர்ச்­சி­யைக் குறிப்­பது, ஜி.வி.ஏ., எனப்­படும், மொத்த மதிப்­புக் கூட்­டல். 2017-- – -18ம் நிதி­யாண்­டில் இந்­தி­யா­வின், ஜி.டி.பி., 6.7 சத­வீ­த­மும், ஜி.வி.ஏ., 6.5 சத­வீ­த­மும் உயர்ந்­துள்­ளன.
ஜி.டி.பி., 6.6 சத­வீ­த­மாக மட்­டுமே வள­ரும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட நிலை­யில், 6.7 சத­வீத வளர்ச்சி கொஞ்­சம் தெம்­ப­ளிக்­கிறது. இதற்கு கார­ணம், சென்ற நிதி­யாண்­டின் கடைசி காலாண்­டில், அதா­வது ஜன­வரி – மார்ச், 2017ல் ஏற்­பட்ட அப­ரி­மி­த­மான வளர்ச்சி.அந்த காலாண்­டில், ஜி.டி.பி., 7.7 சத­வீ­த­மாக வளர்ந்து, மொத்த ஆண்­டின் வளர்ச்சி மதிப்­பீட்டை உயர்த்­தி­யுள்­ளது. இந்த மதிப்­பீ­டு­கள் சொல்­லும் செய்­தி­கள் என்ன?
முத­லில் ஜன­வரி – மார்ச், 2017 காலாண்டு விப­ரங்­களை எடுத்­துக்­கொள்­வோம். இதை, ஜன­வரி – மார்ச், 2016 காலாண்­டு­டன் ஒப்­பி­டும் பழக்­கம் தான் நம்­மி­டம் உண்டு. அப்­போது, பண மதிப்­பி­ழப்­பும், அதன் தாக்­க­மும் தொடர்ந்து கொண்­டி­ருந்த நேரம். அத­னால் அப்­போது, ஜி.டி.பி., மதிப்­பீடு மிக­வும் குறை­வாக இருந்­தது. அத­னோடு ஒப்­பி­டும் போது, இந்த நிதி­யாண்­டின் காலாண்டு உயர்­வாக இருப்­ப­தில் வியப்­பில்லை.
இந்த காலாண்­டில் வளர்ச்சி எங்­கி­ருந்து வந்­தி­ருக்­கிறது? அரசு துறை முத­லீ­டு­கள், தொழில் துறை மற்­றும் கட்­டு­மா­னத் துறை ஆகி­ய­வற்­றில் ஏற்­பட்ட முன்­னேற்­றங்­களே, நான்­காம் காலாண்­டின் வளர்ச்­சிக்கு உத­வி­யுள்­ளன.
கணக்­கி­டும் விதம்
பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கை­யால் ஏற்­பட்ட பாதிப்­பில் இருந்து, முழு­மை­யாக மீண்­டு­விட்­டோம் என்­ப­தற்கு, நான்­காம் காலாண்டு சாட்சி சொல்­கிறது. அதே­போல், ஜி.எஸ்.டி., அமல்­ப­டுத்­தப்­பட்­ட­போது ஏற்­பட்ட ஏற்ற, இறக்­கங்­களில் இருந்­தும், நம் பொரு­ளா­தா­ரம் மீண்­டுள்­ளது.
ஜி.வி.ஏ., 6.5 சத­வீ­தம்
மட்­டுமே வளர்ந்­துள்­ளதை பார்க்­கும்­போது, அதா­வது, ஜி.டி.பி.,யை விட­வும் குறை­வாக வளர்ந்­துள்­ளதை பார்க்­கும்­போது, இதை வேறு­வி­த­மாக புரிந்­து­கொள்ள வேண்­டிய தேவை ஏற்­ப­டு­கிறது.அதா­வது, ஜி.டி.பி.,யைக் கணக்­கி­டும் விதம் இது தான். ஜி.வி.ஏ., + வரி­கள் – மானி­யங்­களே, ஜி.டி.பி., மதிப்­பீட்­டைத் தரும். இப்­படி பார்க்­கும்­போது, கூடு­த­லான வரி­கள் மூலம் ஈட்­டப்­பட்ட வரு­வாயே வளர்ச்­சிக்கு வழி செய்­துள்­ளதை புரிந்­து­கொள்­ள­லாம்.துறை ரீதி­யா­கப் பார்க்­கும் போது, சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, பல துறை­கள் வள­ர­வில்லை என்­ப­தும் கண்­கூடு.
உதா­ர­ண­மாக விவ­சா­யம், 3 சத­வீ­தம் சரிவு; சுரங்­கம், 16 சத­வீ­தம் சரிவு; உற்­பத்தி துறை, 3 சத­வீ­தம் சரிவு.சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது, வளர்ந்­துள்ள துறை­கள் என்று பார்த்­தால், வர்த்­த­கம், ஓட்­டல்­கள், போக்­கு­வ­ரத்து, தொலை­தொ­டர்பு, ஒலி­ப­ரப்பு சேவை­கள், நிதித் துறை, ரியல் எஸ்­டேட், தொழில்­சார் சேவை துறை ஆகி­யவை மட்­டுமே வளர்ச்சி பெற்­றுள்­ளன.தலை­வ­லி­கள்சென்ற நிதி­யாண்­டின் வளர்ச்சி, 7.1 சத­வீ­தம். அத­னு­டன் ஒப்­பி­டும்­போது, 6.7 சத­வீ­தம் என்­பது மைனஸ், 0.4 சத­வீ­தம் சரிவு தான். இந்­தச் சரிவை, நாம் சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது.
இது பொரு­ளா­தார இழப்பு மட்­டு­மல்ல, வேலை­யி­ழப்பு, உற்­பத்தி இழப்பு என்று பல விஷ­யங்­களை உள்­ள­டக்­கி­யது.நான்­காம் காலாண்­டில் தெரி­யும் வளர்ச்சி முகம், அடுத்து வரும் காலாண்­டு­க­ளி­லும் தொட­ரும் என்­பதே எதிர்­பார்ப்பு. இத­னால், 2018 – -19ம் நிதி­யாண்­டில், நாம், 7.5 சத­வீ­தம் வள­ரு­வோம் என்­பதே இந்­திய அர­சின் கணிப்பு.பரந்­து­பட்ட, அதே­ச­ம­யம் துரித வளர்ச்சி ஏற்­பட்­டால் மட்­டுமே இத்­த­கைய முன்­னேற்­றத்தை நம்­மால் அடைய முடி­யும்.
இன்­றைக்கு இந்­தியா சந்­திக்­கும் மூன்று பிரச்­னை­கள், நம்மை கவலை கொள்ள வைத்­துள்­ளன. உயர்ந்து வரும் கச்சா எண்­ணெய் விலை, உய­ரும் வட்டி விகி­தங்­கள், பொதுத்­துறை வங்­கி­க­ளின் வாராக்­க­டன்­கள் ஆகி­ய­வையே, நமக்­கான பெரிய தலை­வ­லி­கள்.
‘ரேட்­டிங்’ நிறு­வ­னங்­கள்
இந்­நி­லை­யில், இவற்­றைக் கணக்­கில் எடுத்­துக்­கொண்ட இரண்டு, ‘ரேட்­டிங்’ நிறு­வ­னங்­கள் சொல்­லி­யி­ருப்­ப­தை­யும் இங்கே கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்ள வேண்­டும். 7.5 சத­வீ­தம் வளர்ச்சி ஏற்­படும் என்ற மதிப்­பீட்டை, ‘மூடீஸ்’ நிறு­வ­னம் மாற்­ற­வில்லை. ஆனால், வெளிப்­புற பாதிப்­பு­கள் அதி­க­ரித்­தாலோ, இந்­திய அர­சின் நிதி உறு­தித் தன்­மையோ அல்­லது வங்­கி­க­ளின் பலம் குறைந்­தாலோ, தங்­க­ளு­டைய மதிப்­பீட்­டைக் குறைக்க வேண்டி வர­லாம் என, தெரி­வித்­துள்­ளது.
மற்­றொரு நிறு­வ­ன­மான, பிட்ச், தங்­க­ளு­டைய மதிப்­பீடு7.5 சத­வீ­தம் அல்ல, 7.3 சத­வீ­தம் தான் என்று தெரி­வித்­துள்­ளது.இதே­ச­ம­யத்­தில் வெளி­யா­கி­உள்ள இன்­னொரு தர­வை­யும், இங்கே கணக்­கில் எடுத்­துக் கொள்­வோம். ‘பர்­சே­சிங் மேனே­ஜர்ஸ் இண்­டெக்ஸ் அதா­வது, பி.எம்.ஐ., எனப்­படும் உற்­பத்தி சார்ந்த குறை­யீடு, நம் உற்­பத்­தித் துறை­யில் லேசான தேக்­கம் இருப்­பதை உறுதி செய்­துள்­ளது. ஏப்­ரல் மாதம், 51.6 புள்­ளி­யில் இருந்து மே மாதம், 51.2 புள்­ளிக்­குச் சரிந்­துள்­ளது.
அதா­வது உற்­பத்­தி­யாகி வெளி­வ­ரும் பொருட்­களில், வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­தில், புதிய தொழில்­க­ளைத் துவங்­கு­வ­தில் சுணக்­கம் ஏற்­பட்­டி­ருப்­ப­தையே இச்­ச­ரிவு சொல்­கிறது.
வாகன விற்­பனைமுடிந்­தது முடிந்­த­வை­யாக இருக்­கட்­டும், 2018 – 19ம் நிதி­யாண்டு உற்­சா­க­மான ஆண்­டாக இருப்­ப­தற்கு, வாய்ப்பு தென்­ப­டு­கி­றதா என்று நீங்­கள் கேட்­பது புரி­கிறது.இருக்­கிறது... இந்த ஆண்டு, நல்ல மழை பொழிவு இருக்­கும். அத­னால் விவ­சாய செழிப்பு இருக்­கும் என்­பது எதிர்­பார்ப்பு. வானிலை ஆய்வு மைய­மும் இதற்கு மழை பொழிவை உறுதி செய்­தி­ருக்­கிறது. அதே­போல், அரசு முத­லீ­டு­கள் தொட­ரும். ஜி.எஸ்.டி., மூலம் வரும் வரு­வாய் பெரு­கும்.
இன்­னொரு பக்­கம் மக்­க­ளி­டம் வாங்­கும் சக்தி பெரு­கும்.ஏற்­க­னவே, பொரு­ளா­தா­ரத்­தின் அள­வு­கோ­லாக கரு­தப்­படும், ‘ஆட்­டோ­மொ­பைல்’ துறை தொடர்ச்­சி­யாக வளம் பெற்று வரு­கிறது. ஒவ்­வொரு மாத­மும் இரு­சக்­கர, நான்கு சக்­கர வாக­னங்­க­ளின் விற்­பனை உயர்ந்து வரு­வ­தோடு, டிராக்­டர்­க­ளின் விற்­ப­னை­யும் பெரு­கி­யுள்­ளது. இவை­யெல்­லாம் இங்கே வளர்ச்­சிக்­கான சாத்­தி­யத்­தையே உரக்­கச் சொல்­கின்­றன.
வளர்ச்­சிக்கு இணக்­க­மான முயற்­சி­களில் மட்­டும் அடுத்த ஓராண்­டுக்கு மத்­திய அரசு கவ­னம் செலுத்­து­மா­னால், ஜி.டி.பி., மதிப்­பீ­டு­க­ளோடு சேர்ந்து, இந்­திய மக்­கள் வாழ்க்­கைத் தர­மும் நிம்­ம­தி­யும் உய­ரும் என்­பது நிச்­ச­யம்.
ஆர்.வெங்­க­டேஷ் பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)