8 கைவினை பொருட்களுக்கு, 'புவிசார் குறியீடு'  தமிழக கைத்திறன் வளர்ச்சி கழகம் நடவடிக்கை8 கைவினை பொருட்களுக்கு, 'புவிசார் குறியீடு' தமிழக கைத்திறன் வளர்ச்சி ... ... ஆடை வர்த்தகத்தை வளைக்கும் சீன நிறுவனங்கள்  எல்லை நாடுகளில் கட்டமைப்புகள் நிறுவி வியூகம் ஆடை வர்த்தகத்தை வளைக்கும் சீன நிறுவனங்கள் எல்லை நாடுகளில் ... ...
பெண்கள் தொழில் துவங்க உதவி ஐ.நா., – ‘நிடி ஆயோக்’ ஏற்பாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2018
00:40

பெங்களூரு:ஐ.நா.இந்­திய வர்த்­தக கூட்­ட­மைப்பு, ‘நிடி ஆயோக்’ அமைப்பு ஆகி­யவை இணைந்து, பெண்­கள், தொழில் துவங்­கு­வ­தற்கு உத­வும் அமைப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.இது குறித்து, வெளி­யி­டப் ­பட்­டுள்ள கூட்டறிக்கை:
இந்­தி­யா­வில்,பெண் தொழில்­மு­னை­வோ­ருக்கு, முத­லீட்­டா­ளரை அணு­கு­ வ­தும், முத­லீட்டை திரட்டு­வ­தும் சவா­லான அம்­சங்­களாக உள்­ளன.வலை­த­ளங்­களில் புது­மை­யான தொழில்­களில் ஈடு­படும் ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள், முத­லீ­டு­களை திரட்­டு­வ­தில் பாலின பாகு­பா­டு­களை எதிர்­கொள்­கின்­றன.
இத்­த­கைய போக்கை கட்­டுப்­ப­டுத்­த­வும், பெண் தொழில்­மு­னை­வோ­ருக்கு தேவை­யான முத­லீ­டு­கள், தொழில்­நுட்ப உதவி­கள், ஒருங்­கி­ணைந்த சந்தை வாய்ப்­பு­கள் ஆகி­ய­வற்றை வழங்­க­வும் முடிவு செய்யப்­பட்­டுள்­ளது.இதற்­காக, ‘பெண் தொழில்­மு­னை­வோ­ருக்­கான, ஐ.நா., இந்­தியா – நிடி ஆயோக் முத­லீட்டு அமைப்பு’ ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இந்த அமைப்பு, மாநில அர­சு­கள், தனி­யார் துறை பங்­கு­தா­ரர்­கள், துணி­கர முத­லீட்­டா­ளர்­கள், சர்­வ­தேச நன்­கொ­டை­யா­ளர்­கள், நிதி அமைப்­பு­கள் உள்­ளிட்­ட­வற்­றின் ஒருங்­கி­ணைந்த சேவை­களை, பெண் தொழில்­மு­னை­வோர் பெறு­வ­தற்கு பாடு­படும்.சர்­வ­தேச மற்­றும் ஐ.நா., பெண்­கள் முன்­னேற்ற அமைப்­பு­கள், பெண் தொழில்­மு­னை­வோரை அடை­யா­ளம் காணும் பணியை மேற்­கொள்­ளும்.தேர்­வா­கும் பெண் தொழில்­மு­னை­வோ­ரின் திட்­டங்­க­ளுக்கு தேவை­யான உத­வி­கள், சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­கள் வாயிலாக ஏற்­ப­டுத்தி தரப்­படும்.
தொழில்­நுட்ப அறிவு, தேவை­யான முத­லீடு, சந்தை வாய்ப்பு உள்­ளிட்ட அனைத்து உத­வி­களும் கிடைப்­ப­தால், பெண்­கள் ஆர்­வத்­து­டன் தொழில் துவங்க முன்­வ­ரு­வர் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில், ஆண்­க­ளுக்கு நிக­ராக, பெண்­க­ளின் பங்­க­ளிப்பு உயர வேண்­டும்.
அவ்­வாறு உய­ரும்­பட்சத்­தில், 2025ல் இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில், 2.9 லட்­சம் கோடி டாலர் அதி­க­ரிக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
நிதி – தொழில்நுட்பம் – சந்தை வாய்ப்பு

பெண் தொழில்­மு­னை­வோ­ருக்­கான, ஐ.நா., இந்தியா – நிடி ஆயோக் முத­லீட்டு அமைப்­பில் நிதி­யு­தவி, தொழில்­நுட்­பம், சந்தை வாய்ப்பு உள்­ளிட்­ட­வற்றை வழங்க, எச்.டி.எப்.சி., --– ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, எஸ்.பி.ஐ., உள்­ளிட்­டவை இணைந்­துள்­ளன.இவற்­று­டன், கடிலா பர்மா, பிலிப்ஸ் இந்­தியா, டாடா கெமிக்­கல்ஸ், அம்­புஜா சிமென்ட்ஸ் ஆகி­ய­வை­யும் இடம்­பெற்­றுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)