பதிவு செய்த நாள்
12 ஜூன்2018
18:18

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு அதிக ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான வரலாற்று சந்திப்பால் இருநாடுகளுக்கு இடையே புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்காரணமாக ஆசியா உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்ததாலும், பணவீக்கம் மீதான எதிர்பார்ப்பாலும், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்ந்து 35,692.52-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 55.90 புள்ளிகள் உயர்ந்து 10,842.85-ஆகவும் நிறைவடைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|