பதிவு செய்த நாள்
22 ஜூன்2018
00:19

மும்பை : இந்தாண்டு, புதிய பங்கு வெளியீடுகள் மூலம், 35 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட வாய்ப்பு உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இது குறித்து, ‘யர்னஸ்ட் அண்டு யங்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: கடந்த ஆண்டு, புதிய பங்கு வெளியீடுகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்தது; அதுபோல, இந்தாண்டும் நன்கு இருக்கும். பொருளாதார வளர்ச்சி சூடுபிடித்திருப்பதும், பணப்புழக்கம் பெருகியிருப்பதும், இதற்கு துணை புரியும். ஒரு டஜனுக்கு மேற்பட்ட சிறந்த நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளில் களமிறங்கி, 35 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும்.
தனியார் பங்கு முதலீட்டாளர்கள், ஒரு நிறுவனத்தின் செயல்பாடு, நிர்வாகம், வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் பங்களிப்பை வழங்குகின்றனர். அதனால், அவர்களை பின்னணியாக கொண்ட நிறுவனங்களுக்கு, இதர நிறுவனங்களை விட, பங்கு வெளியீட்டில் அதிக வரவேற்பு கிடைக்கிறது. கடந்த, 2017ல், சிறு, நடுத்தர நிறுவனங்கள் பிரிவை தவிர்த்து, 40 நிறுவனங்கள், பங்கு வெளியீட்டில் இறங்கின. அவற்றில், தனியார் பங்கு முதலீட்டாளர்களின், எஸ்.பி.ஐ., லைப் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு, மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட, 10 நிறுவனங்கள் முன்னிலை வகித்தன.
இந்த வகையில், தெமாசெக் ஹோல்டிங்ஸ், ஐ.எப்.சி., ஆகியவை, ஐந்து பங்கு வெளியீடுகளில், முறையே, 397 கோடி டாலர் மற்றும் 150 கோடி டாலர் திரட்டின. இந்தாண்டும், தனியார் பங்கு முதலீட்டாளர்கள் பின்னணியில் உள்ள நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளுக்கு வரவேற்பு கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|