தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ‘போர்ஜிங்’ சங்கம் கோரிக்கைதொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ‘போர்ஜிங்’ சங்கம் கோரிக்கை ... ஓராண்டு காணாத வளர்ச்சியில் சேவைகள் துறை ஓராண்டு காணாத வளர்ச்சியில் சேவைகள் துறை ...
செலுத்தும் ஜி.எஸ்.டி., அரசுக்கு சென்றடைகிறதா? மத்திய அரசு அதிகாரி கண்டுபிடித்த புதிய செயலி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2018
00:18

நுகர்­வோர் செலுத்­தக்­கூ­டிய, ஜி.எஸ்.டி., அர­சுக்கு முறை­யாக சென்­ற­டை­கி­றதா என்­பதை அறிய, ‘ஜி.எஸ்.டி., வெரிபை’ என்ற செய­லியை, இந்­திய வரு­வாய் பணி அதி­காரி ஒரு­வர் கண்­டு­பி­டித்­து உள்­ளார்.
ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்­றும் சேவை வரி, 2017ம் ஆண்டு ஜூலை, 1 முதல் நாடு முழு­வ­தும் நடை­மு­றைக்கு வந்­தது. இந்த வரி சேவை அறி­மு­க­மாகி ஓராண்டு நிறை­வ­டைந்­தது.இந்த தினத்தை, ஜி.எஸ்.டி., தின­மாக மத்­திய அரசு கொண்­டா­டி­யது. இந்­நி­லை­யில், ஐத­ரா­பா­தில் மத்­திய, ஜி.எஸ்.டி., இணை ஆணை­ய­ராக பணி­யாற்­றும், ரகு கிரண் என்ற, இந்­திய வரு­வாய் பணி அதி­காரி, ‘ஜி.எஸ்.டி., வெரிபை’ என்ற, ‘ஆன்­டி­ராய்டு’ மொபை­லுக்­கான புதிய செய­லியை, ஜூலை, 1ல் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.
இந்த செய­லியை, அவரே கண்­டு­பி­டித்­துள்­ளார். ‘கூகுள் பிளே ஸ்டோ­ரில்’ இந்த இல­வச செய­லியை பதி­வி­றக்­கம் செய்து கொள்ள முடி­யும். இந்த செய­லி­யின் உள்ளே சென்­ற­தும், நிறு­வ­னம் பதிவு செய்த, ஜி.எஸ்.டி., எண்­களை அதில், ‘டைப்’ செய்­த­வு­டன், பதிவு செய்த நிறு­வ­னத்­தின் பெயர், மத்­திய அல்­லது மாநில அர­சின் வரை­யறை, பதிவு செய்த தினம், வணி­கத்­தின் விப­ரம் உட்­பட பல்­வேறு தக­வல்­கள் அதில் இடம் பெறு­கின்றன.
பதிவு செய்­ய­வில்லை எனில், நிறு­வ­னம் பதிவு செய்­ய­வில்லை என்ற தக­வல்­களும் உட­ன­டி­யாக கிடைக்­கின்றன.சில நிறு­வ­னங்­கள், கடை­கள், ஜி.எஸ்.டி., பதிவு செய்­யா­மல் அதே சம­யம் நுகர்­வோ­ரி­டம் வரி வசூல் செய்­து­வி­டு­கின்றன. நாம் செலுத்­தும் வரி அர­சுக்­கும் செல்­வ­தில்லை.
இந்த செய­லியை தர­வி­றக்­கம் செய்து கொண்­டால், ஒரு நிறு­வ­னம் பதிவு செய்­து­கொண்ட நிறு­வ­னம்­தானா என்­பதை எளி­தில் கண்­டு­பி­டித்­து­வி­ட­லாம். வரி மோசடி செய்­வது கடி­ன­மா­கி­வி­டும். நாம் செலுத்­தும், ஜி.எஸ்.டி., அர­சுக்கு செல்­லுமா என்­பதை உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ள ­மு­டி­யும்.
இது குறித்து, தமி­ழக வணி­க­வ­ரித் துறை உயர் அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:நுகர்­வோர், ஜி.எஸ்.டி., செலுத்­தும் முன், சரி­யான விப­ரங்­களை அறிந்து கொள்ள வேண்­டும் என்ற நோக்­கில், இந்­திய வரு­வாய் பணி அதி­காரி, ரகு கிரண் இந்த முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளார். இது அவ­சி­ய­மான ஒன்­றா­கும். அவ­ரது பணி தொடர வாழ்த்­து­கள்.
–--நமது நிரு­பர் –-

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)