ஜி.எஸ்.டி.,யில், ‘ரிவர்ஸ் சார்ஜ்’ ஆய்வுக் குழு பரிசீலனை ஜி.எஸ்.டி.,யில், ‘ரிவர்ஸ் சார்ஜ்’ ஆய்வுக் குழு பரிசீலனை ... விண்ணப்பம் ஏற்க மறுக்கும் ஜி.எஸ்.டி., தளம்‘ரீபண்ட்’ எதிர்பார்க்கும் வர்த்தகர்கள் தவிப்பு விண்ணப்பம் ஏற்க மறுக்கும் ஜி.எஸ்.டி., தளம்‘ரீபண்ட்’ எதிர்பார்க்கும் ... ...
வர்த்தகம் » ஜவுளி
பருத்திக்கு ஆதார விலை உயர்வு: பஞ்சு விலை அதிகரிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2018
01:16

திருப்பூர்:பருத்­திக்­கான குறைந்­த­பட்ச ஆத­ரவு விலையை, மத்­திய அரசு, கிலோ­வுக்கு, 1,130 ரூபாய் உயர்த்தி உள்­ளது. இத­னால், சீசன் துவக்­கத்­தி­லேயே பஞ்சு விலை அதி­க­ரிக்­கு­மென, ஜவு­ளித் துறை­யி­னர் தெரி­விக்­கின்­ற­னர்.

குஜ­ராத், மஹா­ராஷ்­டிரா, தெலுங்­கானா, ஆந்­திரா உள்­ளிட்ட வட மாநி­லங்­களில், அதி­க­ளவு பருத்தி விளை­விக்­கப்­ப­டு­கிறது. ஜின்­னிங் நிறு­வ­னங்­கள், பருத்­தி­யி­லி­ருந்து, பஞ்சு பிரித்­தெ­டுக்­கின்­றன. பருத்தி விவ­சா­யி­க­ளுக்கு நியா­ய­மான விலை கிடைப்­ப­தற்­காக, மத்­திய அரசு, ‘கப்­பாஸ்’ எனப்­படும் கொட்டை நீக்­காத பருத்­திக்கு, ஆதார விலை நிர்­ண­யிக்­கிறது.

பிர­த­மர் மோடி தலை­மை­யில், மத்­திய அமைச்­ச­ரவை, குறைந்­த­பட்ச ஆதார விலை, கிலோ­வுக்கு 1,130 ரூபாய் உயர்த்தி ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. அதன்­படி, 4,020 ரூபாயாக இருந்த நடுத்­தர பருத்­திக்­கான ஆதார விலை, 5,150 ரூபா­யா­க­வும், கிலோ, 4,320 ரூபா­யாக இருந்த நீள் இழை பருத்­திக்­கான ஆதார விலை, 5,450 ரூபா­யா­க­வும்உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

‘இந்­தி­யன் டெக்ஸ்­பி­ர­னர்ஸ் பெட­ரே­ஷன்’ கன்­வீ­னர், பிரபு தாமோ­த­ரன் கூறி­ய­தா­வது:பருத்­திக்கு குறைந்­த­பட்ச ஆதார விலை, கிலோ­வுக்கு, 1,130 ரூபாய் உயர்த்­தப்­பட்­டுள்­ள­தால், பருத்தி பயி­ரி­டும் பரப்பு அதி­க­ரிக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கடந்த, 2017 – 18ல், பருத்தி சீசன் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யில், தற்­போது கேண்டி, 48 ஆயி­ரம் ரூபாயை எட்­டி­யுள்­ளது.ஆதார விலை அதி­க­ரித்­துள்­ள­தால், இனி­வ­ரும் காலங்­களில் சீசன் துவக்­கத்­தி­லேயே பஞ்சு விலை, வழக்­கத்தை விட கேண்­டிக்கு, 1,500 முதல், 2,000 ரூபாய் அதி­க­ரித்து காணப்­படும். 2018- – 19 பருத்தி சீசன் துவக்­கத்­தில், 1 கேண்டி பஞ்சு, 41 ஆயி­ரம் ரூபா­யாக இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர் கூறி­னார்.


பருத்தி ஆதார விலைக்கு, ‘சைமா’ வரவேற்பு :மத்­திய அரசு அறி­வித்­துள்ள பருத்­திக்­கான ஆதார விலையை, தென்­னிந்­திய பஞ்­சா­லை­கள் சங்­கம் (சைமா) வர­வேற்­றுள்­ளது.‘சைமா’ தலை­வர் நட­ராஜ் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:விவ­சா­யி­க­ளின் வரு­மா­னத்தை இரட்­டிப்­பாக்­கும் இந்த அறி­விப்பை, ‘சைமா’ வர­வேற்­கிறது. அதே­நே­ரத்­தில் இந்த விலை உயர்வு, பஞ்­சா­லை­கள் மீதும், ஜவுளி வாங்­கும் சாதா­ரண மக்­கள் மீதும் தாக்­கம் செலுத்­தும். சர்­வ­தேச பருத்தி விலையை விட, உள்­நாட்­டில் விலை அதி­க­மா­னால் ஏற்­று­ம­தியை பாதிக்­கும்.

எனவே, பருத்தி விவ­சா­யி­கள் பய­ன­டைய மானி­யத்தை நேர­டி­யாக வழங்­க­வேண்­டும்.விலை நில­வ­ரத்­தில் ஏற்­படும் ஏற்ற இறக்­கங்­களை சமா­ளிக்க, பருத்தி சீச­னில் விலை நிலைப்­ப­டுத்­து­தல் நிதி அறி­வித்து ஜவு­ளித்­து­றை­யி­ன­ருக்கு, 5 முதல், 7 சத­வீத வட்டி மானி­ய­மும், தாராள கட­னு­த­வி­யும், 10 சத­வீத, ‘மார்­ஜின் மணி’ உத­வி­யும் வழங்­க­ வேண்­டும்.தற்­போது நில­வும் சிறந்த விதை தொழில்­நுட்­பம் இல்­லாமை, பருத்தி வேளாண் ஆராய்ச்சி இல்­லாமை, விதை நீக்­கும் ஆலை­மட்­டத்­தில் நடக்­கும் கலப்­ப­டம், தரம் சரிவு பிரச்­னை­களை சரி­செய்ய, பருத்தி தொழில்­நுட்­பத்­திட்­டத்தை கொண்­டு­வ­ர­வேண்­டும்.இவ்­வாறு, அந்த அறிக்­கை­யில் நட­ராஜ் தெரி­வித்­துள்­ளார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)