பதிவு செய்த நாள்
22 ஜூலை2018
23:29

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிந்து வருகிறது. இந்த மாதம் மட்டும், 1 பேரலுக்கு, ஒன்பது டாலர் விலை குறைந்துள்ளது. கடந்த புதன் கிழமையன்று, அமெரிக்க எண்ணெய் அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தி, வரலாற்று உயர்வாக, தினசரி, 11 மில்லியன் பேரல்கள் என்பதை எட்டியது.நவம்பர் 2017 பின், தினசரி 1 மில்லியன் பேரல்கள் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாரம் ஒரு முறை வெளிவரும் அமெரிக்க எண்ணெய் இருப்பு விபரப்படி, கடந்த வாரத்தில், 5.8 மில்லியன் பேரல்கள் அதிகரித்தது.
இது, 3.6 மில்லியன் பேரல்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் வெளிவந்ததால், விலை வீழ்ச்சி அடைந்தது.நிலவிவரும் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக மோதல் காரணமாகவும், பொருளாதார வளர்ச்சி தடைபடும் என்ற கண்ணோட்டத்தில், கச்சா எண்ணெயின் தேவை குறையக் கூடும் என்ற நோக்கத்தினாலும் விலை சரிவு காணப்பட்டது.
இவ்வாறான அரசியல் சார்ந்த முடிவுகளால், சந்தையில், எண்ணெய் மற்றும் கமாடிட்டி பொருட்களின் விலை, அதிக ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது. கடந்த வெள்ளியன்று விலையில் சிறிய ஏற்றம் காணப்பட்டது. இந்நிலையில், சவுதி அரேபியாவின் மக்கா கவர்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், சவுதி அரேபியாவின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதை கட்டுக்குள் கொண்டுவர, ஆகஸ்ட் மாதத்தில், தினசரி, 1 லட்சம் பேரல் என்ற அளவுக்கு, ஏற்றுமதியை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். இதன் மூலமாக, சரிவில் இருந்த எண்ணெய் விலை, சிறிதளவு மீண்டது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4,670 4,550 4,755 4,860என்.ஒய்.எம்.இ.எக்ஸ். (டாலர்) 67.90 66.70 69.00 70.20
தங்கம், வெள்ளி
சர்வதேச சந்தையில், கடந்த வாரம், தங்கம் மற்றும் வெள்ளி, விலை சரிந்து வர்த்தகமாகின.அமெரிக்க நாணய குறியீடான டாலரின் மதிப்பு உயர்வும், அமெரிக்கா –-- சீனா இடையே நிலவிவரும் வர்த்தகம் மோதலும், இதன் மூலம் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாகவும், தங்கம் விலை சரிந்து, வர்த்தகம் நடக்கிறது. மேலும், அமெரிக்கா, தன் வட்டி விகிதத்தை தொடர்ந்து, இந்த ஆண்டு அதிகரித்து வருகிறது. பொதுவாகவே வட்டி விகிதம் உயரும்போது, தங்கம் மீதான முதலீடு ஆர்வம் குறைந்து, அரசு கருவூலங்கள் மற்றும் அது சார்ந்த கடன் பத்திரங்களின் மீது முதலீடு செய்வது வழக்கமாகும்.
இதனால், முதலீட்டாளர்கள் தொடர்ந்து, தங்கம் மீதான ஆர்வத்தை குறைத்து, அரசு கருவூலங்களில் முதலீடு செய்து வருகின்றனர். வரும் காலங்களிலும் தங்கம் விலையில் சரிவு தோன்றும் என்ற கருத்து நிலவுகிறது. சர்வதேச சந்தையில், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான, 6 மாதங்களில், 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை, 150 டாலர் அளவுக்கு குறைந்துள்ளது. அதாவது, 1,360 டாலரிலிருந்து, 1,210 டாலராக குறைந்துள்ளது.
இருப்பினும், நமது உள்நாட்டு ஆபரண சந்தையில், சர்வதேச சந்தையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, விலை சரிவு குறைவாகவே இருந்தது. இதற்கு முக்கிய காரணம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகும். கடந்த வாரத்தில், இறுதி நாட்களான வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில், தங்கம் சிறிதளவு விலை ஏற்றம் கண்டு, வர்த்தகம் முடிவுற்றது.
தங்கம்:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்
சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 27,775 27,450 28,150 28,350காம்எக்ஸ் (டாலர்) 1,215 1,202 1,234 1,241
வெள்ளி:
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 38,080 37,610 38,550 39,100காம்எக்ஸ் (டாலர்) 15.35 15.15 15.70 15.95
செம்பு:
செம்பு விலையானது, 2017ம் ஆண்டு உயர்வுக்குப் பின், இந்த ஆண்டு துவக்கம் முதலே சரிவை சந்தித்து வருகிறது. தொடர்ந்து ஏழாவது மாதமாக, விலை குறைந்து வருகிறது. இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயர்வு. இரண்டாவதாக, நிலவிவரும் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல்.
சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள், தங்களது இறக்குமதி பொருட்களுக்கான வரியை உயர்த்தி வருகின்றன. இதனால், அனைத்து நிலைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலை மூலப்பொருட்களான செம்பு, நிக்கல், இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலைகளில் நல்ல தாக்கம் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் தேவை நுகர்வு தேவை குறைந்ததன் காரணமாக, விலை கடுமையாக சரிந்துள்ளது. வரும் நாட்களில், இத்தகைய போக்கு கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருள் வணிக முன்பேர சந்தையின் அளவுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 414.00 409.00 419.00 424.50
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|