பதிவு செய்த நாள்
26 ஜூலை2018
23:23

மும்பை : நேற்று, மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, முதன் முறையாக, 37 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
குறியீடு, வர்த்தகத்தின் இடையே, 37,061.62 புள்ளிகளை எட்டி, இறுதியில், முன்தினத்தை விட, 126.41 புள்ளிகள் உயர்ந்து, 36,984.64 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து நான்கு நாட்களில், சென்செக்ஸ், 507 புள்ளிகளை அதிகரித்துக் கொண்டது. இந்தாண்டு, சென்செக்ஸ், 20வது முறையாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ குறியீடும், 35.30 புள்ளிகள் உயர்ந்து, 11,167.30 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை கண்டது. வர்த்தகத்தின் இடையே, குறியீடு, 11,185.85 புள்ளிகள் வரை உயர்ந்தது. இக்குறியீடு, இந்தாண்டு ஜன., 29ல், 11,130.40 புள்ளிகளாக, புதிய உச்சத்தை கண்டது. அதன் பின், இம்மாதம், 24ம் தேதி, 11,134.30 புள்ளிகளை எட்டியதே சாதனையாக இருந்தது.
டிரம்ப் :
ஜி.எஸ்.டி.,யில், 100க்கு மேற்பட்ட பொருட்களின் வரி குறைக்கப்பட்டதால், இவ்வாரம், நுகர்பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளுக்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. முன்னணி நிறுவனங்கள் வெளியிட்டு வரும், ஏப்., – ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள், சந்தை மதிப்பீட்டை விட அதிகமாக உள்ளன. அத்துடன், இயல்பான பருவ மழை, ரூபாய் மதிப்பின் ஏற்றம் ஆகியவையும், பங்குச் சந்தையை விறுவிறுப்பாக்கி உள்ளன.
சர்வதேச நிலவரத்தை பொறுத்தவரை, வாகன துறை சாரா பொருட்களுக்கு பூஜ்ய வரி விதிப்பது குறித்து, ஐரோப்பிய கூட்டமைப்புடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், சர்வதேச வர்த்தகப் போர் உருவாகும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுவும், பங்குச் சந்தை ஏற்றத்திற்கு துணை புரிந்துள்ளது. நேற்று, பொறியியல் சாதனங்கள், நுகர்பொருட்கள், ரியல் எஸ்டேட் மற்றும் வங்கிப் பங்குகள், அதிக அளவில் ஏற்றத்துடன் கைமாறின.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|