விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்.,   விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்., ... உணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிது உணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பங்­குச்­சந்தை முத­லீட்­டில் பணம் சம்­பா­திப்­பது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
06:16

பெரும்­பா­லா­னோ­ருக்கு பங்­குச்­சந்தை முத­லீட்­டில் ஆர்­வம் இருக்­கிறது. பங்கு முத­லீடு அதிக பயன் தரக்­கூ­டி­ய­தா­க­வும் அமை­கிறது. பங்­குச்­சந்­தை­யில் முத­லீடு செய்­வது எளி­மை­யா­னது, ஆனால் சுல­ப­மா­னது இல்லை. பங்கு முத­லீட்­டில் லாபம் பார்க்க, ஈடு­பாடு, பொறுமை மற்­றும் ஒழுக்­கம் அவ­சி­யம். அதோடு சந்தை செயல்­பாடு பற்­றிய புரி­த­லும் தேவை. இதற்கு பின்­பற்ற வேண்­டிய வழி­கள்:

வீட்­டுப்­பா­டம் செய்­யுங்­கள் :
நினைத்­த­தும் பங்­கு­களை வாங்­கி­வி­டக்­கூ­டாது. முத­லில் பங்­கு­களை ஆய்வு செய்து, சரி­யான பங்­கு­களை தேர்வு செய்ய வேண்­டும். ஆய்வு செய்­யா­மல் ஏதோ ஒரு கார­ணத்­திற்­காக பங்­கு­களை வாங்கி விட்டு, லாபத்தை எதிர்­பார்ப்­பது லாட்­டரி சீட்டு வாங்­கு­வது போல் ஆகி­வி­ட­லாம். தெரிந்­த­வற்­றில் முத­லீடு செய்­யுங்­கள். தெரி­யா­த­வற்றை அறிந்து கொள்­ளுங்­கள்.

வர்த்­த­கத்­தில் முத­லீடு :
நீங்­கள் பங்­கு­களில் முத­லீடு செய்­ய­வில்லை, வர்த்­த­கத்­தில் முத­லீடு செய்­கி­றீர்­கள் என்­பது பங்­குச்­சந்தை பால­பா­டம். எனவே தேர்வு செய்­யும் பங்கு தொடர்­பான நிறு­வன வர்த்­த­கம் பற்றி நீங்­கள் நன்கு அறிந்­தி­ருக்க வேண்­டும். வர்த்­த­கத்தை அறி­வது, நிறு­வன எதிர்­கால போக்கை கணிக்க உத­வும். இதன் மூலம் சிறந்த முடிவை மேற்­கொள்­ள­லாம்.

--மந்தைப் போக்கு வேண்­டாம் :
சந்­தை­யில் மற்­ற­வர்­கள் செய்­வதை பின்­பற்ற நினைப்­பது இயல்­பா­னது. ஆனால் இத்­த­கைய மந்தைப் போக்கை கைவிட வேண்­டும். மற்­ற­வர்­கள் முத­லீடு செய்­கின்­ற­னர் என்­ப­தற்­கா­கவே, ஒரு பங்கை வாங்­கக்­கூ­டாது. நண்­பர்­கள், உற­வி­னர்­கள் ஆலோ­சனை அடிப்­ப­டை­யி­லும் பங்­கு­கள் வாங்­கு­வதை தவிர்க்க வேண்­டும். முறை­யான ஆய்வு தேவை.

முத­லீடு ஒழுக்­கம் :
சரி­யான பங்­கு­களில் சீராக முத­லீடு செய்து வர வேண்­டும். பங்­குச்­சந்தை, ஏற்ற இறக்­க­மான போக்­கிற்கு உட்­பட்­டது என்­றால், கணக்­கிட்ட, ரிஸ்க்கை எடுத்து, தேவை எனில் மாற்று நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும். ரிஸ்க்கை பர­வ­லாக்­கு­வது சிறந்த வழி. அதா­வது பர­வ­லாக முத­லீடு செய்ய வேண்­டும்.

அள­வான எதிர்­பார்ப்பு :
பங்கு முத­லீட்­டில் எதிர்­பார்ப்­பும் யதார்த்­த­மா­ன­தாக இருக்க வேண்­டும். அள­வுக்கு அதி­க­மான பலனை எதிர்­பார்த்து முத­லீடு செய்­வது புத்­தி­சா­லித்­த­ன­மான உத்தி அல்ல. பங்­குச்­சந்தை ஏற்ற இறக்கமானது, அதிக பலனை மட்­டுமே மன­தில் கொள்­வது, தவ­றான முடி­வு­க­ளுக்கு வித்­தி­டும். உப­ரித்­தொ­கையை பங்­கு­களில் முத­லீடு செய்ய வேண்­டும். சேமிப்பை அல்ல.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)