விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்.,   விப்ரோவை பின்னுக்கு தள்ளிய எச்.சி.எல்., ... இணைப்பு என்­பது முதிர்ச்­சி­யின் அடை­யா­ளம் இணைப்பு என்­பது முதிர்ச்­சி­யின் அடை­யா­ளம் ...
உணர்ந்து நடக்க வேண்­டிய நேர­மிது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2018
06:20

பங்­குச் சந்தை குறி­யீ­டு­கள் மேலும் உயர்ந்து, சந்தை தொடர்ந்து புதிய உச்­சம் தொடும் நிலை­யில், முத­லீட்­டா­ளர்­கள் மன­தில் பல புதிய எண்ண ஓட்­டங்­கள் தெரி­கின்­றன.

ஆண்­டின் துவக்­கத்­தில், குறி­யீடு சார்ந்த பங்­கு­களில் முத­லீடு செய்­வதை முழு­தும் தவிர்த்து, மற்ற பங்­கு­களில் ஆர்­வம் காட்­டு­வ­தையே ஒட்டு மொத்த சந்­தை­யும் விரும்­பி­யது. அந்த முத­லீட்டு நிலைப்­பாடு, ஆறே மாதங்­களில் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பெரும் வலி­யை­யும், வேத­னை­யை­யும் தந்­துள்­ளது. சந்­தை­யின் போக்கு பற்­றி­யும், பங்கு மதிப்­பீடு பற்­றி­யும் உரு­வான ஒரு­மித்த கருத்து, தவ­றாகி விட்­டது.

அவ­சர தேர்வு :
சந்­தை­யின் ஒரு­மித்த கருத்து பல­முறை தவ­றா­கிப்­போன வர­லாறு இருப்­பி­னும், இம்­முறை அதன் தாக்­கம் மிக அதி­கம். இதற்கு, இந்த நிலைப்­பாடு சார்ந்த நம் முத­லீட்டு முடி­வு­க­ளின் மதிப்பு மிக முக்­கிய கார­ணம். எஸ்.ஐ.பி., எனும் தவணை முறை முத­லீ­டு­கள் மிக அதி­க­மாக நடந்­துள்­ள­தும், பிற சொத்­து­களில் இருந்து பங்­கு­க­ளுக்கு மாற்­றப்­பட்ட முத­லீ­டு­க­ளின் அள­வும், நம் மன­தில் முக்­கி­ய­மாக கொள்ள வேண்­டி­யவை.

சந்­தைக்­குள் புதிய முத­லீட்­டா­ளர்­க­ளின் வர­வு வர­லாறு காணா­தது என்­ப­தும் அடிப்­படை கார­ணம். இத்­த­கைய சூழ­லில், நடந்­தது என்ன; நடக்­கப்­போ­கும் நிகழ்­வு­களை எப்­படி எதிர்­கொள்­வது என்­பது குறித்து ஆராய வேண்­டும். வாங்­கிய பங்­கு­களில் பெரும் சரி­வும், வாங்க மறுத்த பங்­கு­களில் விலை ஏற்­ற­மும், வலியை இரட்­டிப்­பாக ஆக்­கி­யுள்ள நிலை­யில், அடுத்து என்ன செய்ய வேண்­டும் என்ற தவிப்பு ஆரம்­பித்­துள்­ளது. சற்று அமை­தி­யாக யோசித்து, இந்த தவிப்பை எதிர்­கொள்­வது நல்­லது.

முத­லில், நாம் செய்த முத­லீட்டு தேர்­வு­கள் தவறா என்று பார்ப்­போம். குறு நிறு­வன முத­லீ­டு­கள் அனு­ப­வ­முள்ள முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கும் பெரும் சவா­லாக இருக்­கும் நிலை­யில், சந்­தை­யில் புதி­தாக நுழைந்த பல­ரும் அதை அவ­சர தேர்வு செய்­தது தெளி­வாக தெரி­கிறது.

முத­லீட்டு வெற்­றி­கள் :
இதில், அடிப்­ப­டை­யில் தவ­றான தேர்­வு­களும் அடக்­கம். அத்­த­கைய தவ­று­களை அடை­யா­ளம் கண்டு விலக வேண்­டிய அவ­சி­யம் உள்­ளது. பெரு நிறு­வ­னங்­களை தவிர்த்து முத­லீடு செய்­வ­தன் அபா­யத்தை உணர்ந்து, அடுத்த ஆறு மாதங்­களில் உரிய மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். முக்­கி­ய­மாக, அவ­சர முடி­வெ­டுக்­கும் வழக்­கத்தை முழு­தும் தவிர்ப்­பது அவ­சி­யம். சந்தை, உச்­சத்­தில் இருக்­கும் போது, நிதா­னம் மிக அவ­சி­யம். அந்த நிதா­னத்­தின் மூலம், நமக்கு நன்மை செய்­யும் வகை­யில் முடி­வு­களை எடுத்­துக் கொள்ள வேண்­டும்.

இப்­போது அவ­ச­ர­மாக நிப்டி பங்­கு­களை வாங்க வேண்­டி­ய­தில்லை. மாறாக, நிப்­டி­யில் பொறு­மை­யாக முத­லீடு செய்ய முனைய வேண்­டும். தனிப் பங்­கு­களில் மட்­டுமே முத­லீடு செய்­யா­மல், குறி­யீ­டு­க­ளி­லும் தொடர்ந்து முத­லீடு செய்­யும் வழக்­கத்தை ஏற்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். வரும் காலங்­களில், சந்­தை­யின் ஒட்­டு­மொத்த வளர்ச்­சி­யில் பங்கு பெறு­வதை குறிக்­கோ­ளா­கக் கொண்டு, அதற்கு ஏற்ற முடி­வு­களை எடுக்க வேண்­டும். தவ­று­களில் இருந்து, விரைந்து வெளியே வர வேண்­டும். அதுவே, வருங்­கால முத­லீட்டு வெற்­றிக்கு நாம் எடுக்­கும் முதல் முயற்சி. தோல்­வி­களை களை­வ­தில் இருந்து மட்­டுமே, முத­லீட்டு வெற்­றி­கள் உரு­வெ­டுக்­கும் என்­பதை உணர்ந்து நடக்க வேண்­டிய நேரம் இது.

–ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)