பதிவு செய்த நாள்
16 ஆக2018
00:05
சென்னை:ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், நடப்பு நிதியாண்டு முதல் காலாண்டில், 20 சதவீதம் வருவாய் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து, அந் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தொடர்ந்து, 14 காலாண்டுகளாக செயல்பாட்டு லாபம் ஈட்டி வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 25.4 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.
முதல் காலாண்டில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் கொள்திறன், 14 சதவீதம்; வருவாய், 20 சதவீதம்; பயணியர் வருகை, 4 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.மேலும், முதல் காலாண்டில், 2,270 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில், 1,886 கோடி ரூபாயாக இருந்தது.
இதே போன்று, செலவுத் தொகை தற்போதைய முதல் காலாண்டில், 2,245 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டு, 1,711 கோடி ருபாயாக இருந்தது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|