பதிவு செய்த நாள்
21 ஆக2018
02:00

‘ராணுவ உற்பத்தி துறை இறக்குமதி செய்யும் பொருட்களை, உற்பத்தி செய்து தர முன் வரும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என, ராணுவ உற்பத்தி துறை செயலர், அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர், தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவு செய்த விபரம்: பொதுத்துறை நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் ராணுவ தளவாட பொருட்களில், குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நினைக்கலாம். அவ்வாறு நினைத்தால்,அது தொடர்பான தகவல்களை, பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்கு, definvestorcell@ddpmod.gov.in என்ற, ‘இ – மெயில்’ முகவரிக்கு அனுப்பலாம்.இது குறித்து, ராணுவ தளவாட உற்பத்தி துறை ஆலோசனை செய்து, பொது கொள்முதல் ஆணை, 2017ன் கீழ் அறிவிக்க நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அறிவிப்பு வெளியிடப்பட்டால், குறிப்பிட்ட பொருட்களை உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தயாரித்து, ‘சப்ளை’ செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்.இதுபோல், ஏற்கனவே, 77 பொருட்கள், பொது கொள்முதல் ஆணை, 2017ன் கீழ், உள்நாட்டு உற்பத்தி பொருட்களை கொள்முதல் செய்ய, ராணுவ தளவாட உற்பத்தி துறை அறிவித்துள்ளது.இவ்வாறு அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|