பதிவு செய்த நாள்
25 ஆக2018
23:40

மும்பை: ‘‘நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்த தவறும், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், காணாமல் போகும்,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், என்.எஸ்.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.அவர், குஜராத் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசியதாவது:நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், மக்களின் டிபாசிட் பணத்தில் இயங்குகின்றன. அதனால், இவ்வங்கிகள் மக்களிடம் அதிக நம்பிக்கையை பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சந்தைப் பங்கு : கடந்த, 2002ல், குஜராத், மாதவ்புரா மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி முறைகேடுகள் அம்பலமான பின், இவ்வங்கிகளின், சந்தைப் பங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த, 2001– -02ல், நகர்ப்புற கூட்டுறவு வங்கி களின் சந்தை பங்கு, 6.4 சதவீதமாக இருந்தது. இது, 2016- – 17ல், 3.3 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு, வங்கித் துறையில் அதிகரித்துள்ள போட்டி, புதிய நிதிச் சேவைகள் அறிமுகம் போன்ற காரணங்களை கூறலாம்.எனினும், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், டிபாசிட்தாரர்களின் நம்பிக்கையை தக்க வைத்து, தொடர்ந்து வங்கிச் சேவையில் நீடிக்க, நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்துவது அவசியம். இல்லையென்றால் காணாமல் போக நேரிடும்.சந்தை பங்கை வைத்து, ஒரு வங்கி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மதிப்பிடலாம். நகர்புற கூட்டுறவு வங்கிகளின், சந்தைப் பங்கு, பாதியாக குறைந்துள்ளதால், அவை, மக்களிடம் அதிக நம்பிக்கையை பெறுவதற்கான நடவடிக்கைகளை, ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.
நிதி வல்லுனர்கள் : மாநில அரசுகளுடன், முத்தரப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான மாநிலங்களில், வங்கிச் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் இயக்குனர் குழுவில், முன்னுரிமை அடிப்படையில், நிதி வல்லுனர்களை நியமிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது.அதேசமயம், இரட்டை தலைமை காரணமாக, நகர்புற கூட்டுறவு வங்கிகளில் எழும் பிரச்னைகளுக்கு, ஓரளவிற்கே ரிசர்வ் வங்கியால் தீர்வு காண முடிகிறது.எந்த நோக்கத்திற்காக கூட்டுறவு வங்கிகள் துவக்கப்பட்டனவோ, அந்த கொள்கைகளின் படி நடக்க வேண்டும்.வங்கி நிர்வாகச் செயல்பாடுகளை வரையறை செய்து, பொறுப்புகள் சரிவர பிரித்து அளிக்கப்பட வேண்டும். இதுபோன்ற பல்வேறு அம்சங்களுடன், வங்கியின் இயக்குனர் குழு நிர்வாகம் தொடர்பான வரைவு விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.மேலும், கூட்டுறவு வங்கிகளை, ‘ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ ஆக மாற்றுவதற்கும் அனுமதி அளிக்கப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது, கூட்டுறவு வங்கிகள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும்.கூட்டுறவு வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகியவற்றின் வர்த்தகத்தில் அதிக வேறுபாடு கிடையாது. அதனால், கூட்டுறவு வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் பேங்க் உடன் இணையலாம். அல்லது அவ்வாறு மாறுவதற்கான உரிமம் பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டிபாசிட் : நகர்புற கூட்டுறவு வங்கிகளில், 10 கோடி ரூபாய்க்கு குறைவான டிபாசிட்களுடன், 124 வங்கிகள் உள்ளன. 232 வங்கிகளின் டிபாசிட், 10.-25 கோடி ரூபாயாக உள்ளது. இன்னும், ஒருங்கிணைந்த வங்கிச் சேவை வசதிகளை அறிமுகப்படுத்தாமல், 171 வங்கிகள் உள்ளன. நகர்புற கூட்டுறவு வங்கிகளில், 2005 – -2018 வரை, 127 இணைப்பு நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|