நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் காணாமல் போகும்  ரிசர்வ் வங்கி துணை கவர்னர்  எச்சரிக்கைநகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் காணாமல் போகும் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ... ... பாது­காப்­பு­டன் கூடு­தல் வட்டி! பாது­காப்­பு­டன் கூடு­தல் வட்டி! ...
பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
23:36

மதிப்­பு­சார் முத­லீடு, 1929ல் அமெ­ரிக்­கா­வில் நடந்த மிகப் பெரிய பொரு­ளா­தார சரி­வுக்கு பிறகு உரு­வெ­டுத்து, அடுத்த, 50 ஆண்­டு­களில் ஒரு சித்­தாந்­த­மாக அங்­கீ­கா­ரம் பெற்­றது.

தொடர்ந்து, கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கற்­பிக்­கப்­பட்­ட­தும், அதன் மாண­வர்­களும், பயிற்­சி­யா­ளர்­களும் அடைந்த முத­லீட்டு சாத­னை­களும், இந்த சித்­தாந்­தம் அங்­கீ­கா­ரம் பெற முக்­கி­ய­மான கார­ணங்­கள் ஆகின. கடந்த, 50 ஆண்டு காலத்­தில், பல மாறு­படும் பொரு­ளா­தார சூழல்­களில், நிரூ­ப­ண­மான ஒரு முத­லீட்டு சித்­தாந்­த­மாக மதிப்­பு­சார் முத­லீடு ஏற்­கப்­பட்டு உள்­ளது. ஆகவே, முத­லீட்டு சித்­தாந்­தம் என்­பது, சூழ்­நி­லை­யின் கார­ண­மாக உரு­வாகி, காலம் கடந்து நிரூ­ப­ண­மாகி, காலத்­திற்­கேற்ப உரு­மாற்­றம் பெற்று, தன்னை நிலை நாட்­டிக்­கொள்­ளும் தன்மை கொண்­டது. அவ­சர கால நட­வ­டிக்­கை­களும், சந்­தர்ப்­ப­வாத உத்­தி­களும் சித்­தாந்­த­மாகி விடாது.

காலத்தை கடந்து நிற்­பது மட்­டுமே சித்­தாந்­தம் என்ற நிலையை அடை­யும். புதி­தாய் வடி­வம் கண்டு, காலத்தை வெல்­வது தான் முத­லீட்டு சித்­தாந்­தம். மதிப்­பு­சார் முத­லீட்­டின் ஆரம்ப வடி­வங்­களில், இரண்டு முக்­கிய குறி­யீ­டு­கள் சார்ந்து முத­லீ­டு­கள் தேர்வு செய்­யப்­பட்­டன. ஒன்று, நிறு­வன சொத்து மதிப்பு சார்ந்­தது; இன்­னொன்று, டிவி­டெண்டு சார்ந்­தது. டிவி­டெண்டு என்­பது, நிறு­வன ஆண்டு லாபத்­தில், பங்­கு­தா­ர­ருக்கு கொடுக்­கப்­படும் பங்கு. ஆனால், நிறு­வன மதிப்பு உயர உயர, முத­லீடு செய்­யக்­கூ­டிய வாய்ப்­பு­கள் குறைந்­தன. மதிப்­பு­சார் முத­லீட்­டின் காலம் முடிந்து விட்­டதோ என்ற கேள்வி, 80களில் எழுந்­தது.

அப்­போது, புதிய வடி­வம் தந்து, இந்த சித்­தாந்­தத்தை மேலும் உயர்த்­திய பெருமை, வாரன் பபெட்டை சாரும். வருங்­கால லாபத்தை நிர்­ண­யித்து, அதன் இன்­றைய மதிப்பை கண்­டெ­டுத்து, மதிப்­பு­சார் முத­லீடு செய்ய கற்­றுக் கொடுத்­தார், பபெட். இதன் மூலம், இந்த மதிப்­பு­சார் முத­லீட்டு சித்­தாந்­தம் மீண்­டும் உயிர்ப்­பிக்­கப்­பட்­டது. சித்­தாந்­தங்­கள் வடி­வம் மாறும் போது, அவை காலத்­திற்­கும் நிலைக்­கும் தன்­மையை அடைய வேண்­டும். அந்த தன்­மையை பபெட், இந்த சித்­தாந்­தத்­திற்கு ஏற்­ப­டுத்­தி­னார்.

இடைப்­பட்ட கால­கட்­டங்­களில், இந்­தியா போன்ற வள­ரும் நாடு­களில், பபெட் போல­வும், கிர­ஹாம் போல­வும் முத­லீடு செய்­யக்­கூ­டிய வாய்ப்பு, ஒரே நேரத்­தில் ஏற்­பட்­டது. அந்த நேரங்­களில், எந்த முறையை தேர்வு செய்­வது என்ற குழப்­பம் முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்­டது. ஏதா­வது ஒரு முறையை தேர்வு செய்­வதா அல்­லது இரு முறை­க­ளை­யும் பயன்­ப­டுத்தி செல்­வதா என்ற குழப்­பம் பல­ருக்கு. ஒரே சித்­தாந்­தத்­தில் இரு வழி­களை கோடிட்டு தேர்வு செய்­யச் சொன்­னால், நமக்கு எது சரி வருமோ, அதை சார்ந்து இருப்­பதே நல்­லது.

சித்­தாந்­தம் சரி­யாக இருந்­தா­லும், நாம் தேர்வு செய்­யும் வடி­வம் நமக்கு உகந்­த­தாக அமைய வேண்­டும். அடுத்­த­வர்­கள் என்ன செய்­கின்­ற­னர் என்­பதை பற்றி எல்­லாம் கவ­லைப்­ப­டா­மல், நம்மை பற்­றிய புரி­தலை வளர்த்து, அதை மட்­டுமே சார்ந்து, மதிப்­பு­சார் முத­லீட்டு சித்­தாந்­தத்தை முன்­னெ­டுத்து செல்ல வேண்­டும். வடி­வம் எது­வாக இருந்­தா­லும், நிரந்­தர நஷ்­டம் ஏற்­ப­டாத வண்­ணம் முத­லீடு செய்ய, மதிப்­பு­சார் முத­லீடு மட்­டுமே ஒரே வழி.

-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)