உயிரி எரிபொருள் ஏற்றுமதி; மத்திய அரசு கட்டுப்பாடுஉயிரி எரிபொருள் ஏற்றுமதி; மத்திய அரசு கட்டுப்பாடு ... புதிய பொறுப்பில் சந்தா கோச்சார் புதிய பொறுப்பில் சந்தா கோச்சார் ...
இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டு காப்பீடு; புதிய விதிமுறை செப்., 1ல் அமலுக்கு வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2018
03:29

புதுடில்லி : புதிய கார், இரு­சக்­கர வாக­னம் ஆகி­ய­வற்­றுக்கு, கட்­டா­யம் நீண்ட கால மூன்­றாம் நபர் வாகன காப்­பீடு எடுக்­கும் விதி­முறை, செப்., 1ல் அம­லுக்கு வரு­கிறது.

தற்­போது, ஓராண்­டிற்கு மட்­டுமே, மூன்­றாம் நபர் வாகன காப்­பீடு எடுக்­கப்­ப­டு­கிறது. ஆண்­டு­தோ­றும், காப்­பீட்டை புதுப்­பித்து வர வேண்­டும். ஒரு­சில பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­கள் மட்­டும், பல ஆண்­டு­க­ளுக்கு காப்­பீடு வழங்­கு­கின்­றன.

உத்தரவு :
இந்­நி­லை­யில், ‘அனைத்து பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களும் கட்­டா­யம், நீண்ட கால மூன்­றாம் நபர் வாகன காப்­பீட்டு சேவை வழங்க வேண்­டும்’ என, காப்­பீட்டு ஒழுங்­கு­முறை ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது குறித்து ஆணை­யம், அனைத்து பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளுக்­கும் அனுப்­பி­யுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது: உச்ச நீதி­மன்­றம் பிறப்­பித்த உத்­த­ர­வின்­படி, அனைத்து பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­களும், வாகன உரி­மை­யா­ளர்­க­ளுக்கு, நீண்ட கால மூன்­றாம் நபர் வாகன காப்­பீடு வசதி வழங்க வேண்­டும். இதன்­படி, புதிய கார்­க­ளுக்கு, கண்­டிப்­பாக, மூன்று ஆண்­டு­க­ளுக்கு, மூன்­றாம் நபர் வாகன காப்­பீடு அளிக்க வேண்­டும்.

அது­போல, புதிய இரு­சக்­கர வாக­னங்­க­ளுக்கு, ஐந்து ஆண்­டு­க­ளுக்கு, மூன்­றாம் நபர் வாகன காப்­பீடு வசதி வழங்­கப்­பட வேண்­டும். இந்த திட்­டங்­களை, காப்­பீட்டு நிறு­வ­னங்­கள் தனி­யாக வகைப்­ப­டுத்தி, செயல்­ப­டுத்­த­லாம். புதிய விதி­முறை, செப்., 1ல் அம­லுக்கு வரு­கிறது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இழப்பீடு :
வாகன உரி­மை­யா­ளர்­கள், விபத்து தொடர்­பான சட்­டப் பிரச்­னை­களை சமா­ளிக்­க­வும், பாதிக்­கப்­பட்ட நபர் இழப்­பீடு பெற­வும், மூன்­றாம் நபர் வாகன காப்­பீடு திட்­டம் உத­வு­கிறது. காப்­பீடு ஒழுங்­கு­முறை ஆணை­யம், ஒவ்­வொரு நிதி­யாண்­டிற்­கும், மூன்­றாம் நபர் வாகன காப்­பீட்­டிற்­கான பிரி­மி­யத்தை நிர்­ண­யிக்­கிறது. தற்­போது, நீண்ட கால மூன்­றாம் நபர் காப்­பீடு திட்­டம் அம­லுக்கு வர உள்­ள­தால், செப்., 1 முதல், அடுத்த ஆண்டு மார்ச் வரை­யி­லான புதிய பிரி­மி­யம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இதன்­படி, நாளை மறு­நாள் முதல் விற்­ப­னை­யா­கும் கார், இரு­சக்­கர வாக­னங்­க­ளுக்கு, முறையே, மூன்று மற்­றும் ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான பிரி­மி­யம், மொத்­த­மாக வசூ­லிக்­கப்­படும். பொது காப்­பீட்டு நிறு­வ­னங்­கள், முதல் ஆண்டு பிரி­மி­யம் தொகையை, வரு­வா­யாக எடுத்­துக் கொள்­ளும். அடுத்த இரு ஆண்­டு­க­ளுக்­கான தொகை, முன்­கூட்­டியே செலுத்­தப்­பட்ட பிரி­மி­யம் ஆக கரு­தப்­படும்.

தற்­போது, வாகன திருட்டு, வாகன பாதிப்பு ஆகி­ய­வற்­றுக்கு, தனி காப்­பீட்டு திட்­டங்­கள் உள்­ளன. இவற்­று­டன், மூன்­றாம் நபர் வாகன காப்­பீ­டும் சேர்த்து, ‘பேக்­கேஜ்’ ஆக, ஒருங்­கி­ணைந்த காப்­பீட்டு திட்­ட­மும் கிடைக்­கிறது.

மூன்றாம் நபர் வாகன காப்பீடு:
(செப்., 1 – மார்ச் 31, 2019 )கார் 3 ஆண்டு பிரி­மி­யம் (ரூபாய்)1,000 சி.சி., வரை 5,2801,001 சி.சி., – 1,500 சி.சி., வரை 9,5341,500 சி.சி.,க்கு மேல் 24,305இரு­சக்­கர வாக­னம் – 5 ஆண்டு பிரி­மி­யம் (ரூபாய்)75 சி.சி., வரை 1,04576 சி.சி., – 150 சி.சி., வரை 3,285151 சி.சி., – 350 சி.சி., வரை 5,453

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)