பதிவு செய்த நாள்
01 செப்2018
05:16

புதுடில்லி : கேரளாவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்கால், ஆகஸ்ட் மாத வாகன விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என, ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து, ஆய்வு நிறுவனமான எடெல்வைஸ் அறிவித்துள்ளதாவது:மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளால், வாகன விற்பனை, ஆகஸ்டில் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும், வழக்கமாக ஓணம் பண்டிகையை ஒட்டி, வாகனங்கள் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால், இம்முறை மழை பாதிப்பால், ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாடவில்லை.
எனவே, அதன் தாக்கம் வாகன விற்பனையிலும் பிரதிபலிக்கும்.ஒட்டுமொத்த பயணியர் வாகன விற்பனையை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டில், கேரளாவின் பங்கு, 8 சதவீதமாகும். இருசக்கர வாகன பிரிவில், 4 சதவீதமும், மூன்று சக்கர வாகன பிரிவில், 5 சதவீதமும் கேரளாவில் கடந்த நிதியாண்டில் விற்பனை ஆனது. இவ்வாறு எடெல்வைஸ் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, நொமுரா ஆய்வு நிறுவனம்,பயணியர் வாகன விற்பனையில் பெரிய ஏற்றமில்லாமல் இருக்கும் எனவும், இலகு மற்றும் கனரக வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் மாதத்தில் ஒற்றை இலக்க வளர்ச்சியே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இரு நிறுவனங்களுமே, மாருதி சுசூகி மற்றும் எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனங்களின் விற்பனை, மழையால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் என தெரிவித்து உள்ளன. கேரளாவில், எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம், 11 சதவீத சந்தை வாய்ப்பும், மாருதி சுசூகி நிறுவனம், 8 சதவீத வாய்ப்பும் கொண்டிருப்பதாக எடெல்வைஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|