தாமதமாக வரித்தாக்கல் செய்வது எப்படி?தாமதமாக வரித்தாக்கல் செய்வது எப்படி? ... ‘டிஜிட்­டல்’ பண பரி­வர்த்­தனை நடு­நி­லை­யா­ளர் ‘டிஜிட்­டல்’ பண பரி­வர்த்­தனை நடு­நி­லை­யா­ளர் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
வைப்பு நிதிக்கு மாற்­றாக அமை­யும் கடன்­சார் நிதி­கள் முத­லீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2018
00:17

வைப்பு நிதி தரும் பலன்களை விட அதிக பலனை விரும்பும் முதலீட்டாளர்கள், ‘டெப்ட் பண்ட்’ எனப்படும் கடன்சார் நிதிகளை நாடலாம்.
பெரும்­பா­லான முத­லீட்­டா­ளர்­கள் நிரந்­தர வைப்பு நிதி முத­லீட்­டையே அதி­கம் நாடு­கின்­ற­னர். பாது­காப்­பா­னது, குறைந்த ரிஸ்க் மற்­றும் நிர்­ண­யிக்­கப்­பட்ட பலனை அளிப்­பது இவற்­றின் சாத­க­மான அம்­சங்­க­ளாக அமை­கின்­றன.

எனி­னும், வரு­மான வரி மற்­றும் பண­வீக்­கத்­தின் தாக்­கத்தை கருத்­தில் கொண்­டால், இவற்­றின் பலன் குறை­வா­கவே இருக்­கும். இந்த கார­ணத்­தி­னால் பல­ரும், ‘டெப்ட் பண்ட்’ எனப்­படும் கடன்­சார் நிதி­களை நாடத்­து­வங்­கி­யுள்­ள­னர். இவை அதிக பலன் தரு­வ­தோடு, அதிக தேர்வு வாய்ப்­புக­ளை­யும் கொண்­டி­ருக்­கின்­றன.

கடன்­சார் நிதி­கள்

மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில் ஒன்­றாக, கடன்­சார் நிதி­கள் அமை­கின்­றன. சம­பங்­கு­களில் அதி­கம் முத­லீடு செய்­யும் நிதி­கள் சம­பங்கு நிதி­கள் என அறி­யப்­ப­டு­வது போல, கடன்­சார் மற்­றும் நிர்­ண­யிக்­கப்­பட்ட வரு­மா­னம் தரும் பத்­தி­ரங்­கள் உள்­ளிட்­ட­வற்­றில் கல­வை­யாக முத­லீடு செய்­யும் நிதி­கள் கடன்­சார் நிதி­க­ளாக அமை­கின்­றன.

பல்­வேறு கால அள­வி­லான முதிர்வு கொண்ட அரசு பத்­தி­ரங்­கள், வர்த்­தக நிறு­வன பத்­தி­ரங்­கள், மணி­மார்க்­கெட் பத்­தி­ரங்­க­ளி­லும் இவை முத­லீடு செய்­கின்­றன.ஆனால், இந்த நிதி­கள் தரும் பலன் சந்­தை­யின் போக்­கு­டன் தொடர்பு கொண்­டவை என்­பதை மன­தில் கொள்ள வேண்­டும். இந்த நிதி­கள் முத­லீடு செய்­யும் பத்­தி­ரங்­கள் தரும் வட்டி வரு­மா­னம் உள்­ளிட்­ட­வற்­றின் அடிப்­ப­டை­யில் இவை தரும் பலன் அமை­யும். பத்­தி­ரங்­க­ளின் மூல­தன மதிப்பு உயர்வு அல்­லது தேய்வு அம்­ச­மும் பல­னில் தாக்­கம் செலுத்­தும்.

நிதி வகை­கள்

கடன்­சார் நிதி­களில் பல­வகை இருக்­கின்­றன. நிதி­க­ளுக்கு அடிப்ப­டை­யாக அமை­யும் பத்­தி­ரங்­க­ளுக்கு ஏற்ப வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. சில மாதங்­க­ளுக்கு முன் பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ வெளி­யிட்ட புதிய வகைப்­ப­டுத்­த­லின் படி, 16 வகை­யான கடன்­சார் நிதி­கள் உள்­ளன.

லிக்­விட் பண்ட், அல்ட்ரா ஷார்ட் டியூ­ரே­ஷன் பண்ட், மணி மார்க்­கெட் பண்ட், டைன­மிக் பாண்ட், கார்ப்ப்­ரேட் பாண்ட் பண்ட் உள்­ளிட்­டவை இதில் அடங்­கும். இந்த நிதி­க­ளின் கால அள­வும் மாறு­ப­ட­லாம். லிக்­விட் பண்ட்­கள் பொது­வாக, 91 நாட்­க­ளுக்கு உட்­பட்ட மணி­மார்க்­கெட் பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­கின்­றன.

இந்த நிதி­க­ளின் பலன் அவை செய்­யும் முத­லீ­டு­க­ளின் செயல்­பாட்­டிற்கு ஏற்ப அமை­யும். பத்­தி­ரங்­கள் தரும் பலன் வட்டி விகித போக்­கிற்கு ஏற்ப மாறு­ப­ட­லாம். பத்­தி­ரங்­க­ளின் முதிர்வு காலம் அதி­கம் இருந்­தால், இந்த தாக்­க­மும் அதி­கம் இருக்­கும். குறு­கிய கால நிதி­களில் இவை குறை­வாக இருக்­கும் என கரு­தப்­ப­டு­கிறது.

ரிஸ்க் அம்­சம்

வட்டி விகித போக்கு தவிர, முத­லீடு செய்­யப்­பட்ட நிறு­வ­னங்­க­ளின் பத்­தி­ரங்­கள் பணத்தை திருப்­பித்­தர தவ­றும் அபா­யம் உள்­ளது; இதை, ‘கிரெ­டிட் ரிஸ்க்’ என்­கின்­ற­னர். இதை குறைக்க விரும்­பி­னால், பாது­காப்பு மிக்க அரசு பத்­தி­ரங்­கள் உள்­ளிட்­ட­வற்­றில் முத­லீடு செய்­யும் நிதி­களை தேர்வு செய்­ய­லாம். அதிக ரேட்­டிங் கொண்ட பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்­யும் நிதி­களும் ரிஸ்க் குறைந்­தவை.

வைப்பு நிதி­கள் வரி விதிப்­புக்கு உட்­பட்­டவை. கடன்­சார் நிதி­களும் அவை முத­லீடு செய்­யப்­படும் காலத்­திற்கு ஏற்ப வரி விதிப்­புக்கு உரி­யவை. எனி­னும், இண்­டக்­சே­ஷன் எனும், சாதக அம்­சம் இதில் உள்­ளது. பண­வீக்­கத்தை கருத்­தில் கொண்ட பின் வரி விதிப்பு பொருந்­து­வதை இது குறிக்­கிறது. வைப்பு நிதி­களில் இது கிடை­யாது. ஒரு­வர் தன் நிதி இலக்கு மற்­றும் முத­லீடு காலத்­திற்கு ஏற்ற நிதியை தேர்வு செய்ய வேண்­டும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)