‘டிஜிட்­டல்’ பண பரி­வர்த்­தனை நடு­நி­லை­யா­ளர்‘டிஜிட்­டல்’ பண பரி­வர்த்­தனை நடு­நி­லை­யா­ளர் ... தேவை­கள் ஏற்­ப­டுத்­திய மாற்­றங்­கள் தேவை­கள் ஏற்­ப­டுத்­திய மாற்­றங்­கள் ...
கமாடிட்டி சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2018
00:24

கச்சா எண்ணெய்
சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை, கடந்த ஆகஸ்ட் மாதத்­தின் இரண்­டாம் பாகம் முதல், விலை ஏற்றம் காணப்­பட்­டது. இரு வாரங்­களில், 1 பேர­லுக்கு, 5.5 டாலர் அள­வுக்கு விலை அதி­க­ரித்­துள்­ளது.இதற்கு, இரு முக்­கிய கார­ணங்­கள்.

ஒன்று, ஈரான் நாட்­டின் மீது அமெ­ரிக்கா கொண்டு வந்­துள்ள பொரு­ளா­தார தடை மற்­றும் எண்­ணெய் ஏற்­று­மதி தடை. இது, வரும் நவம்­பர் மாதம் அம­லுக்கு வரு­கிறது.

இரண்­டா­வது, அமெ­ரிக்க எண்­ணெய் இருப்பு விப­ரம். கடந்த இரு வாரங்­களில் இருப்பு விப­ரம் வெளி­வந்த போது, எதிர்­பார்த்­ததை விட இருப்பு அளவு குறை­வாக இருந்­த­தும், விலை­யேற்­றத்­திற்கு சாத­க­மாக அமைந்­தது.‘ஓபெக்’ உறுப்பு நாடு­களில் ஒன்­றான, ஈரா­னின் ஏற்றுமதி தடை செய்­யப்­படும் நிலை­யில், ஆசிய மற்­றும் ஐரோப்­பிய கொள்­மு­தல் நாடு­கள், வேறு நாடு­க­ளு­டன் ஒப்­பந்­தம் செய்­யத் துவங்­கி­யுள்­ளன.

இத­னால், சந்­தை­யில் தட்­டுப்­பாடு நில­வும் என்ற கோணத்­தி­லும் விலை ஏற்­றம் காணப்­பட்­டது. இருப்பினும், இந்த விலையேற்றம், சில கார­ணங்­க­ளால் கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது.அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யே­யான பேச்­சு தோல்­வி­ய­டைந்த நிலை­யில், அமெரிக்கா மீண்டும், 2,000 கோடி டாலர் மதிப்­பி­லான வரி­களை விதிக்க ஆலோ­சித்து வரு­கிறது. புதிய வரி விதிப்பு தொடரும் சூழ்­நி­லை­யில், பொரு­ளா­தார வளர்ச்சி மந்­த­மா­கும் என்ற கோணத்­தில், விலை கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது.

மேலும், அமெ­ரிக்க எண்­ணெய் ஏற்­று­மதி மற்­றும் உற்பத்தி வர­லாறு காணாத அள­வுக்கு உயர்ந்த சூழ­லி­னா­லும், விலை உயர்வு கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது.‘ராய்ட்­டர்ஸ்’ நிறு­வ­னம் நடத்­திய, ‘சர்வே’யில், ஓபெக் உறுப்பு நாடு­க­ளின் மொத்த எண்­ணெய் உற்­பத்தி, ஆகஸ்ட் மாதத்­தில் தின­சரி, 2,20,000 பேரல்­கள் உயர்ந்­துள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கிறது. மேற்­கூ­றிய கார­ணங்­க­ளால், சந்­தை­யில் கச்சா எண்­ணெய் விலை உயர்வு கட்­டுப்­படுத்தப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
தங்கம் வெள்ளி

தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, வார ஆரம்ப நாட்­களில் விலை அதி­க­ரித்து வர்த்­த­க­மா­கியது. எனி­னும், வார இறுதி நாட்­களில் சரிவை சந்­தித்து வர்த்தகம் முடி­வுற்­றது.சர்­வ­தேச சந்­தை­யில், பிற நாடு­க­ளுக்கு எதி­ராக, அமெ­ரிக்க நாணய குறி­யீ­டான டாலர் இண்­டெக்ஸ் தொடர்ந்து வலுப்­பெற்று வரும் நிலை­யில், அதற்கு எதி­ராக, ஆசிய மற்­றும் ஐரோப்­பிய நாடு­களில் மதிப்பு சரி­வு­டன், கமாடிட்டி பொருட்­க­ளின் விலை சரி­வும் நிகழ்ந்து வரு­கிறது.டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, வரலாறு காணாத அள­விற்கு சரிவை சந்­தித்­துள்­ளது. தற்­போது, 1 அமெ­ரிக்க டாலர், 71 ரூபாயை எட்­டி­யுள்­ளது.

கடந்த சில மாதங்­க­ளா­கவே, டால­ரின் மதிப்பு உயர்ந்து வரு­கிறது. இதன் தாக்­கம் தங்­கம் விலை­யில் பிர­தி­ப­லிக்­கிறது.இதைத் தொடர்ந்து, 2018ம் ஆண்டு துவக்­கம் முதல், சர்­வ­தேச சந்­தை­யில், தங்­கம் விலை சரி­வில் இருந்து மீண்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.அசா­தா­ரண சூழல் நில­வும் பட்­சத்­தில், தங்­கம் ஒரு முத­லீட்டு பொரு­ளாக கரு­தப்­படும் போக்கு, காலம் காலமாக இருந்து வரு­கிறது.

அத­னால் தான், இக்­கட்டான சூழ்­நிலை மற்­றும் பொருளா­தார சிக்­கல்­கள் ஏற்­படும் தரு­ணங்­களில், தங்கத்­தின் விலை உயர்ந்து காணப்­படு­வது வழக்­கம்.தற்­போது அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக பிரச்னை இன்­னும் முடி­வுக்கு வர­வில்லை.இந்­நி­லை­யில் அமெ­ரிக்கா, 2,000 கோடி டாலர் மதிப்­பி­லான சீனப் பொருட்­க­ளுக்­கான இறக்­கு­மதி வரி விதிப்பு குறித்து, பொது­மக்­க­ளி­டையே கருத்து கேட்கப்பட்டு வரு­கிறது. இவ்­வார இறு­திக்­குள், இது குறித்து ஒரு தீர்­மா­னம் எடுக்­கப்­படும் என, தெரி­கிறது.

ஐரோப்­பிய கூட்­ட­மைப்­பி­லி­ருந்து இறக்­கு­மதி செய்யப்­படும் கார்­க­ளுக்கு, 25 சத­வீ­தம் இறக்­கு­மதி வரி விதிக்­கப்­ப­ட­லாம் என்ற கருத்­தும் நில­வு­கிறது. இப்­படி நாடு­களுக்­கி­டை­யே­யான அசா­தா­ரண சூழல், தங்­கம் மற்றும் வெள்ளி விலை­யேற்­றத்­துக்கு சாத­க­மாக அமைந்­தது.

செம்பு

செம்பு விலை, இந்த ஆண்டு துவக்­கம் முதலே, சரிவில் இருந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.சர்­வ­தேச சந்­தை­யில், தொழிற்­சாலை மூல­தன பொருட்­கள் மற்­றும் கனி­மங்­கள் ஆகி­ய­வற்­றின் இறக்­குமதி மற்­றும் உப­யோ­கிப்­பில், சீனா முத­லி­டம் வகிக்கிறது. சீனா­வின் இறக்­கு­மதி மற்­றும் உற்­பத்தி பொருட்­கள் ஏற்­று­ம­தி­யில் ஏற்­படும் பாதிப்­பு­கள், விலை­க­ளி­லும் தாக்கத்தை ஏற்­ப­டுத்­தும்.

கடந்த சில மாதங்­க­ளா­கவே, அமெ­ரிக்கா மற்­றும் சில நாடு­க­ளுக்கு இடையே நடந்து வரும் வர்த்­தக மோதல், செம்­பின் விலையை பாதித்து வரு­கிறது.மேலும், அமெ­ரிக்க நாண­யத்­தின் குறி­யீ­டான, டாலர் இண்­டெக்ஸ், சந்­தை­யில், 13 மாத உயர்­வில் வர்த்­த­க­மா­கிறது. இத­னால், அனைத்து கமா­டிட்டி பொருட்­க­ளின் விலை­யும் சரி­வில் இருந்து வரு­கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)