கமாடிட்டி சந்தைகமாடிட்டி சந்தை ... தேவை­கள் ஏற்­ப­டுத்­திய மாற்­றங்­கள் தேவை­கள் ஏற்­ப­டுத்­திய மாற்­றங்­கள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை முருகேஷ் குமார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2018
00:26

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், நிப்டி, கடந்த வாரம் மீண்­டும் உயர்ந்து, புதிய வர­லாற்று உச்­ச­மான, 11,760 புள்­ளி­களை அடைந்­தது. ஜூலை முதல் வாரத்திலி­ருந்து இரு மாதங்­க­ளாக, சந்தை தொடர்ந்து ஏற்­றம் பெற்று வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

திங்­கள் அன்று உயர்ந்து துவங்­கிய சந்தை, வார இறு­தி­யில் சரிந்து வர்த்­த­கம் ஆனது. வர்த்­தக முடி­வில், 11,680 புள்­ளி­க­ளு­டன் வர்த்­த­கம் முடி­வுற்­றது.நடப்பு நிதி­யாண்­டின், ஏப்­ரல் முதல் ஜூன் வரை­யி­லான கால­கட்­டத்­தில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 8.2 சத­வீ­தம் வளர்ச்சி அடைந்­தது. சீனா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யான, 6.7 சத­வீ­தத்தை விட, கடந்த காலாண்­டில், நமது நாட்­டின் வளர்ச்சி உயர்ந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

அடுத்த ஆண்டு, நாடு, பார்லி., தேர்­தலை எதிர்­நோக்கி உள்ள நிலை­யில், அர­சின் செயல்­பா­டு­கள் குறித்து பல­தரப்­பட்ட கருத்­துக் கணிப்­பு­கள் வரும். இத்­த­கைய கருத்­துக் கணிப்­பு­க­ளின் முடி­வு­கள் சந்­தை­யில் தாக்கத்தை ஏற்­ப­டுத்­தும்.இந்­திய பொரு­ளா­தா­ரம் தற்­போது உல­க­ள­வில், ஆறாவது மிகப்­பெ­ரிய பொரு­ளா­தா­ரம் ஆகும். நடப்பு நிதி­யாண்­டில் ஏப்­ரல் முதல் ஜூலை மாதம் வரை­யி­லான நான்கு மாதங்­களில், இந்­தி­யா­வின் நிதிப் பற்­றாக்­குறை, 5.40 லட்­சம் கோடி ரூபாயை எட்­டி­யுள்­ளது.

கடந்த புதன் கிழமை அன்று, ரிசர்வ் பேங்க் ஆப்இந்­தியா வெளி­யிட்­டுள்ள பொரு­ளா­தார வளர்ச்சி கணிப்பில், நடப்பு ஆண்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 7.4 சத­வீ­தமாக இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இதற்கு முன் எதிர்­பார்ப்பு, 6.7 சத­வீ­த­மாக இருந்­தது குறிப்பி­டத்­தக்­கது.மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், சென்­செக்ஸ், கடந்த மாதத்­தில், 1,000 புள்­ளி­கள் அதி­க­ரித்­தது. இதில், 32 பங்­கு­கள் விலை, அதன் வர­லாற்று உச்­சத்தை எட்டியது. அது மட்­டு­மில்­லா­மல், 50 சத­வீ­தத்­துக்­கும் மேல் விலை உயர்ந்­தது.

பங்­கு­க­ளின் மதிப்பை அள­வி­டும், பி.இ.ரேஷியோ தற்­போது, 10 ஆண்டு சரா­ச­ரிக்கு மேல் உயர்ந்து, வர்த்­த­கம் ஆகி வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது. நிறு­வ­னங்­க­ளின் ஆதா­யம் உய­ரும் என்ற எதிர்­பார்ப்­பும், பருவ மழை­யின் சரா­சரி அள­வும் சந்­தைக்கு சாத­க­மாக அமைந்­தன.டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, வர­லாறு காணாத வீழ்ச்சி அடைந்து வரு­வ­தும், சந்­தை­க­ளுக்குசாத­க­மாக அமைந்­தது.

இந்த வாரத்தை பொறுத்­த­வரை நிப்டி, அதன் முதல் ரெசிஸ்­டென்ட்ஸ், 11,760 மற்­றும், 11,820 ஆகும்.சப்­போர்ட், 11,750 ஆகும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)