பதிவு செய்த நாள்
07 செப்2018
00:04
ஆண்டிப்பட்டி:தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் வரத்து அதிகமானதால், சின்ன வெங்காயம் கிலோ, 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள பல பகுதிகளில், சின்ன வெங்காயம் சாகுபடி நடக்கிறது. கடந்த மூன்று மாதத்திற்கு முன் வெங்காயத்தின் விலை கிலோ, 40 ரூபாய் வரை இருந்ததால், விவசாயிகள் பலரும் வெங்காயத்தை நடவு செய்தனர். தற்போது தொடர்ந்து அறுவடை செய்யப்படுகிறது. இந்நிலையில் விலை குறைந்துவிட்டது.
இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் தற்போது தினமும், 40 டன் வெங்காயம் வரத்து உள்ளது. இதனால், படிப்படியாக விலை குறைந்து, தற்போது கிலோ, 10 முதல், 15 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|